ஜப்பானின் 126வது பேரரசர் ஆனார் நருஹிடோ!!

ஜப்பானின் 126வது பேரரசர் ஆனார் நருஹிடோ!! 1

ஜப்பான் நாட்டின் பேரரசராக இன்று அதன் தலைநகரமான டோக்கியோவில் நடைபெற்ற விழாவில் நருஹிடோவிற்கு முடிசூட்டப்பட்டது.

ஜப்பானின் 125வது பேரரசராக இருந்த அகிஹித்தோ அவர்கள் பதவி விலகியதை அடுத்து 126வது பேரரசராக நருஹிடோ தேர்வு செய்யப்பட்டார். பாரம்பரிய உடையில் வந்த ஜப்பானின் பேரரசர் நருஹிடோ அவர்கள் இன்று உலகெங்கிலும் உள்ள ராயல்கள் மற்றும் தலைவர்களுக்கு முன்னால் தனது கிரிஸான்தமம் சிம்மாசனத்தை முறையாக ஏற்றார். விழாவில் 180 நாடுகளிலிருந்து சுமார் 2000 தலைவர்கள் பங்கேற்றனர். விழா பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றது. டிரம்ஸ் மற்றும் கோங்ஸ் ஒலிகள் மட்டும் ஒலித்தது.

விளம்பரம்

விழா முடிந்ததும், பிரதமர் ஷின்சோ அபேபன்சாய்!” (“பேரரசர் நீண்ட காலம் வாழ்க”) என்று மூன்று முறை கூறினார். இரண்டு நூற்றாண்டுகளில் பதவி விலகிய முதல் ஜப்பானிய மன்னராக அவரது தந்தை ஆன மறுநாளே, மே 1 அன்று நருஹிட்டோ பேரரசராக தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். ஹிகிபிஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் முடிசூட்டு விழா கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் மற்றொரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment