வாழும் வனமாக மாற்றப்பட்ட கால்பந்து மைதானம்!

வாழும் வனமாக மாற்றப்பட்ட கால்பந்து மைதானம்! 1

ஆஸ்திரியா நாட்டிலுள்ள க்ல்யாஜெந்ஃப்ர்ட் என்ற இடத்தில் இருக்கும் ஒர்தெர்ஸீ கால்பந்து மைதானம் ஒரு வாழும் காடாக மாற்றப்பட்டது. இது பொதுவாக முப்பதாயிரம் விளையாட்டு ரசிகர்களால் நிறைந்திருக்கும். பருவநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கால்பந்து மைதானம் டிஸ்டோபியன் எதிர்கால கலை நிறுவலில் வாழும் வனமாக மாற்றப்பட்டது. டிஸ்டோபியன் உருவத்தை உயிரியல் பூங்காவில் தான் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபார் ஃபாரஸ்ட்தி அன்யென்டிங் ஆப் நேச்சர்” என்பது கிளாஸ் லிட்மேன் செய்த கலை நிறுவலின் தலைப்பாகும். 8 மீ முதல் 14 மீ உயரம்வரை ஏறக்குறைய 300 மரங்கள் சுற்றியுள்ள நர்சரிகளிலிருந்து வரவழைக்கப்பட்டன. அவற்றுள் சில மரங்கள் தலா 6 டன் வரை எடை கொண்டவை.

விளம்பரம்
வாழும் வனமாக மாற்றப்பட்ட கால்பந்து மைதானம்! 3

முழு மைதானமும் மத்திய ஐரோப்பாவின் கலப்பு வன பண்புகளுடன் காணப்படும் 16 வகை பொதுவான மரங்களால் ஆனது. அவற்றுள் மேப்பிள்ஸ், ஆல்டர்ஸ், பிர்ச், பீச், லார்ச் மற்றும் பைன்ஸ் போன்ற சில வகையான மரங்களையும் காணலாம்.

தொடர்புடையவை  ஒசாமா பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்!

உலகில் காடுகள் அதிகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சிந்தனை சோதனை தற்போது இயற்கை சூழலை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது.

விளம்பரம்

அக்டோபர் மாத இறுதியில் கண்காட்சி மூடப்படுகிறது. அதுவரை பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். “வாழும் வன சிற்பமாக” பணியாற்ற மைதானத்திற்கு அருகிலுள்ள பொது இடங்களில் இந்த காடு மீண்டும் நடப்படும்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment