“தூய்மை இந்தியா” திட்டம் தோல்வியடைந்து குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகிறது. அதுகுறித்தான குறுந்தொடர் உங்கள் பார்வைக்கு!
பொதுவாக சமூக நலத்திட்டங்களில் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு அரசு விரும்பும். அதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்ளும். இது மொத்த திட்ட அம்சத்தின் ஒரு பகுதியாக இருப்பினும், அத்திட்டம் புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுவதும் உண்மை தான்.
ஆனால், தூய்மை இந்தியா திட்டத்தை பொருத்த வரையில் சுகாதார பிரச்சனைகளை முதன்மை நோக்கமாக கொண்டிருப்பினும், இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற வன்முறையை தீர்வாக கொண்டிருப்பது சரியானது அல்ல. அடிப்படை வாழ்வாதார வசதிகள் இல்லாத இடங்களில் இத்தகைய வன்முறைகள் நிகழ்வது சுகாதாரம் மட்டுமே காரணம் கிடையாது.
சுகாதாரத்தை பிரச்சனையை காரணமாக சுட்டிக்காட்டி இரு குழந்தைகள் கொலை செய்யப்படுவதை அத்தகைய எளிதாக நம்மால் எடுத்துக்கொள்ளவும் முடியாது. சமூகத்தில் படிந்திருக்கும் சாதியம் சார்ந்த அச்சுறுத்தல்கள் தான் இரு குழந்தைகளின் உயிர்களை சுகாதாரம் என்ற பெயரில் கொலை செய்துள்ளது.
IZA இன்ஸ்டிடியூட் ஆப் லேபர் எகனாமிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிய அச்சுறுத்தகள் குறித்து நாம் தெரிவு செய்துகொள்ளலாம். “2014-2018: வட இந்திய கிராமப்புறங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதில் ஏற்பட்ட மாற்றங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டபட்டுள்ள அந்த அறிக்கையில், தூய்மை இந்தியா என்ற பெயரில் அதிகாரிகளிடமிருந்தும், மற்ற சாதிய குழுக்களிடமிருந்தும் அதிகப்படியான அச்சுறுத்தல்களை சந்தித்தது பட்டியல் மற்றும் பழங்குடி சாதி மக்கள் தான் என்று தெளிவு செய்துள்ளது.

பொதுநலன் என்ற பெயரில் பட்டியல் சாதியினர் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளனர். மேலும் வால்மீகி கிராமத்தில் வாழும் பட்டியல் சாதி மக்கள் உயர்சாதி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் கழிவறைகளை சுத்தம் செய்வர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அதற்கு மறுத்துள்ளனர். இதன் விளைவாகவே இரு குழந்தைகள் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது மட்டுமின்றி கழிப்பறை கட்டுவதற்கு மக்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பித்து இருந்த போதிலும், அதற்கான அனுமதியும், பணமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது பலதரப்பட்ட விசாரணையில் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.
இத்தகைய மனிதநேயமற்ற செயல்களால், சுகாதாரம் என்ற பெயரில் தாக்குதல்களை நிகழ்த்தும் சாதிய அடக்குமுறை இந்திய கிராமப்புறங்களில் மிக பெரிய கசப்பான சம்பவம். இதில், தலித் மக்கள் வாழும் பகுதிகளில் மற்ற சமூக மக்கள் தொடர்ந்து திறந்த வெளியில் மலம் கழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேபோல இரு சிறு குழந்தைகள் தலித் அல்லாதோர் பகுதிகளில் மலம் கழிக்க சென்ற போது கொலை செய்யப்பட்டனர் என்பதே சுகாதார பாதுகாவலர்களின் முரணான செயல்பாடுகள்.
ஆப்பிரிக்கா போன்ற அண்டை நாடுகளில் கூட பொது வெளியில் மலம் கழிப்பது தொடர்பான பிரசாரங்கள் சமூக பிணைப்புகளோடு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் சாதிய சமூக அச்சுறுத்தல்களை பிண்ணி பிணைத்து கொடூரமான செயல்களுக்கு வழிவகுத்துள்ளது தான் “தூய்மை இந்தியா” திட்டத்தின் மாபெரும் தோல்வி.
நன்றி: எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி
தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு