மோடி ஆட்சியின் 7 சாதனைகள்: கபில் சிபல்

மோடி கடந்த மே 30, 2019 அன்று மீண்டும் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஆட்சிக்கு வந்து கடந்த செப்டம்பர் 06 தேதியோடு 100 நாட்கள் ஆகின்றன. இதனை முன்னிட்டு 100 நாள் விழாவினை அனைத்து மாநிலங்களிலும் பாஜவினர் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இன்று (செப்.10) சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து 100 நாள் சாதனைகளை விளக்கி பேசினார்.

ஆனால் எதிர் கட்சி வரிசையில் இருப்பவர்கள் மோடி அரசின் பொருளாதார கொள்கையை கடுமையாக விமரிசித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும், மூத்த சட்ட நிபுணர்களின் ஒருவருமான கபில் சிபல் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,

விளம்பரம்

1.கடந்த மே 23ஆம் தேதி அன்று சென்செக்ஸ் சுமார் 40,000 புள்ளிகளைத் தொட்டு வணிகமானது. ஆனால் நேற்றோ பங்கு சந்தை 37,150 புள்ளிகளில் நிறைவு அடைந்து பங்கு சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

தொடர்புடையவை  சபரிமலை வழக்கு: மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான கேள்விகளை வைக்கும் உச்ச நீதிமன்றம்

2.சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை கடந்த ஜூன் மற்றும் ஜூலை 2019-ல் விற்று அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் வெளியேறியதால் பொருளாதாரம், அதன் வளர்ச்சி விகிதத்தில் சுருக்கம் கண்டுள்ளது.

விளம்பரம்

3.கடந்த மே 2019-ல் 69 ரூபாய்க்கு இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தற்போது 72 ரூபாய்க்கு ஏறி, இந்திய நாணயத்தின் மதிப்பை குறைந்துள்ளது. இதனால் இறக்குமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

4.இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு 23.5 சதவிகிதம் சரிந்து பலரின் வேலை வாய்ப்புகளை பறித்துள்ளது.

விளம்பரம்

5.இளைஞர்களில் 100ல் 8.2 பேருக்கு வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். வேலைவாய்ப்பு விகிதங்களை உயர்த்துவதற்கு மோடியின் 2.O ஆட்சியில் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

6.அரசைக் காப்பாற்றிக்கொள்ள மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து சுமார் 1.76 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசசு சமீபத்தில் பெற்றுக்கொண்டதால் ரிசர்வ் வங்கியின் எதிர்கால செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  நூறுநாள் வேலைத்திட்டத்தில் பெருகும் இளைஞர்களின் பங்கு!

7.ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் மற்ற வருவாய்கள் போன்றவை அரசின் நடவடிக்கைகளால் பலத்த சரிவை கண்டுள்ளன. இவ்வாறு மோடி 2.O ஆட்சியின் 100வது நாளை சரமாரியாக விமர்ச்சித்துள்ளார்.

விளம்பரம்

Leave a Comment