
திருப்பூரில் செயல்பட்டு வரும் சைனிக் இராணுவப்பள்ளியில் மாணவர்கள் படிக்க உதவித்தொகையுடன் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
திருப்பூரில் மாவட்டத்தில் உள்ள சைனிக் இராணுவ பள்ளியில் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் வருமானத்துக்கேற்ப 50 ஆயிரம் ரூபாய் வரையில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சரகமும் தமிழ்நாடு அரசும் இணைந்து திருப்பூர் மாவட்டம் அமரவாதியில் சைனிக் ராணுவப்பள்ளி இயக்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் நேரடியாக ராணுவத்துக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள். நாடு முழுவதும் இதுபோல் பாதுகாப்பு அமைச்சரகத்தின் கட்டுபாட்டில் மொத்தம் 26 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பூர் சைனிக் இராணுவ பள்ளியில் 6 ஆம் மற்றும் 9 ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பள்ளியில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி அன்று நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு சைனிக் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இராணுவத்தில் பணிபுரியம் வாய்ப்புகளை பெறுவர்.
மேலும், பெற்றோர்களின் வருமானங்களுக்கு ஏற்ப தகுதியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரையில் உதவித்தொகையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பில் மொத்தம் 90 இடங்களும், 9ம் வகுப்பில் 6 இடங்களும் உள்ளன மொத்தம் 96 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், http://www.sainikschoolamaravathinagar.edu.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் செப்டம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பிற்கான லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களுக்கு திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
http://www.sainikschoolamaravathinagar.edu.in/Applications/Admission_Notice_Tamil_2020.pdf