Heroவாக நடிப்பதற்கு முன்பே பாண்டியராஜனோடு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள புரட்சி தளபதி!

விஷால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். விஷால் கோலிவுட்டில் புரட்சி தளபதி என்ற பெயரால் அழைக்கபடுகிறார். இவரது எதார்த்த நடிப்பால் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் புரொடக்ஷன் கம்பெனி வைத்து தயாரிப்பாளராகவும் உள்ளார். இப்போது புதியதாக இயக்குனராகவும் களம் இறங்க உள்ளார் விஷால். ஆம், இயக்குனர் மிஷ்கினுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் துப்பறிவாளன் 2ஆம் பாகத்தை இவரே இயக்க உள்ளாராம்.

Heroவாக நடிப்பதற்கு முன்பே பாண்டியராஜனோடு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள புரட்சி தளபதி! 1

இப்படி பல பரிமானங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறார் விஷால். விஷால் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்பு, நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டதால் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 2004ல் வெளிவந்த செல்லமே படத்தில் ஹீரோவாக வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார் விஷால். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல படவாய்ப்புகள் குவிந்தன். இப்படி ஏராளமான வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்த விஷாலின் தந்தை ஒரு தயாரிப்பாளர்.

விளம்பரம்
Heroவாக நடிப்பதற்கு முன்பே பாண்டியராஜனோடு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள புரட்சி தளபதி! 3

அவர் பெயர் ஜீ.கே.ரெட்டி. அவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். 80’s காலகட்டத்தில் அவர் தயாரித்த ஒரு படத்தில் விஷால் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. விஷால் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே ஒரு படத்தில் குழந்தை நட்ச்சத்திரமாக நடித்துள்ளார். அது என்ன படமென்றால், 1988ல் வெளியான பாண்டியராஜன் நடித்த “ஜாடிக்கேத்த மூடி”. இதை பார்த்த பிறகு இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே! என்று விஷால் ரசிகர்கள் வியப்படைந்தனர்.

தொடர்புடையவை  புயல் வேகத்தில் Car Race ஓட்டி சென்ற தல அஜித்! வைரலாகும் வீடியோ
Heroவாக நடிப்பதற்கு முன்பே பாண்டியராஜனோடு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள புரட்சி தளபதி! 5
விளம்பரம்

Leave a Comment