தெலுங்கு பட இயக்குனரோடு கைகோர்க்கும் தனுஷ்! எந்த டைரக்டர் தெரியுமா?

Dollar Dreams படத்தின் மூலம் அறிமுகம் ஆன இயக்குனர் சேகர் கம்முலா. இந்த திரைப்படம் தேசிய விருது பெற்ற திரைப்படம் அதுமட்டுமில்லாமல் இவரின் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் இவர். இந்நிலையில் இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகிய இவர்கள் நடித்து ஓ.டி.டி யில் கலக்கி கொண்டிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம்.

தெலுங்கு பட இயக்குனரோடு கைகோர்க்கும் தனுஷ்! எந்த டைரக்டர் தெரியுமா? 1

இதை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா ஹாப்பி டேஸ், leader , life is beautiful போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் , ஹிந்தி போன்ற மொழிகளிலும் இயக்கிவருகிறார். நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகிய இருவரும் பிரம்மாண்ட பொருட்செலவில் தனுஷ் நடிக்கும் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

விளம்பரம்
தெலுங்கு பட இயக்குனரோடு கைகோர்க்கும் தனுஷ்! எந்த டைரக்டர் தெரியுமா? 3

இப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ ஒரு சிறந்த இயக்குனரோடு தனுஷ் கூட்டணி அமைக்கவுள்ளார் என்ற செய்தி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தொடர்புடையவை  தேசிய பெண் குழந்தை தினம்
தெலுங்கு பட இயக்குனரோடு கைகோர்க்கும் தனுஷ்! எந்த டைரக்டர் தெரியுமா? 5
விளம்பரம்

Leave a Comment