அமேசான் ஓடிடி தளத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற தி பேமிலி மேன் என்கிற வெப் தொடரின் முதல் பாகம் வெற்றியடைந்தது. ஆனால் இதனின் இரண்டாம் பாகம் பல சர்ச்சைகளை கிளப்பியது. நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடித்துள்ள இத்தொடரின் சில காட்சிகள் மிக பெரிய சர்ச்சை பொருளாக மாறியது.

இதை தொடர்ந்து இதனின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அது மட்டுமில்லாது இந்த வெப் தொடரின் 3ஆம் பாகத்தை பற்றிய மற்றொரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பேமிலி மேன் தொடரின் 3ஆம் பாகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கப்போகதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை பற்றி விஜய் சேதுபத்தியிடமிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.

தற்போது விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவக்குல ரெண்டு காதல் என்கிற திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே ஸ்ரீலங்கா அணியின் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறியதற்கே பல சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் சர்ச்சையை கிளப்பிய பேமிலி மேன் வெப் தொடரில் விஜய்சேதுபதி நடிக்கப்போகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
