
மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சத்யராஜ் திடீரென்று விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. எழுத்தாளர் கல்கியின் எழுத்தினால் உருவான ‘பொன்னியின் செல்வன்’ கதையை மணிரத்னம் காட்சி வடிவில் மாற்ற இறங்கியுள்ளார். மிகுந்த பொருட் செலவில் உருவாகவுள்ள இதை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் தேர்வு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அது தற்போது தான் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் அடர்ந்த காடுகளில், வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் இதில் சத்யராஜ் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது இவர் அதிலிருந்து திடீரென்று விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக மணிரத்னம் விதித்த நிபந்தனை மற்றும் கட்டுபாடுகள் காரணமாக தான் சத்யராஜ் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்காக ஆறு மாதங்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும் கால்ஷீட் காலத்தில் வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று மணிரத்னம் கூறியுள்ளார்.இதுவே முதன்மை காரணமாக உள்ளது என கூறியுள்ளார்.