சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் சஞ்சீங் மற்றும் ஆல்யா. இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்கள். சஞ்சீவ் கார்த்திக் என்ற கேரக்டரிலும், ஆல்யா மான்சா செம்பா என்ற கேரக்டரிலும் நடித்தனர். வேலைக்கார பெண்ணாக வரும் செம்பாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார் கார்த்திக். திரையில் இருந்த இந்த ஜோடி நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர்கள் செய்யும் குறும்புகளை அவ்வபோது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர். Youtube video code embed credits: Sanjeev Alya Youtube Channel

இவர்களுக்கு முதலாவதாக பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் பெயர் ஐலாசையத். பார்ப்பதற்கே பொம்மை போல இருக்கும் ஐலா செய்யும் குறும்பு வீடியோக்களை ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லலாம். அந்த அளவிற்கு ஐலா மீதும், ஆல்யா மற்றும் சஞ்சீவ் மீதும் மக்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார். அதனால் சஞ்சீவ் ஆல்யா மீது காட்டும் அன்பு பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும்.

தற்போது ஆல்யா, சஞ்சீவ், ஐலா ஆகியோர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஐலா செய்யும் குறும்புகளை சஞ்சீவ் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கார்டூன் பார்த்துக் கொண்டே அழகாக அமர்ந்து சாப்பிடும் வீடியோ வைரலானது. swimming pool அருகே அம்மாவுடன் அமர்ந்து கொண்டு அழகாக குளிக்கிறார் ஐலா குட்டி. மேலும் அவர் போனை எடுத்து காதில் வைத்து கொண்டு ஹலோ என்று அழகாக கூறுகிறார். பார்பதற்க்கே அழகாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…