ஐபிஎஸ்ஆ இருந்தீங்களே? உங்களுக்கு இவ்வளவுதான் அறிவா? கிரண்பேடியை வச்சி செய்த நெட்டிசன்கள்

ஹாலிவுட் படத்தில் ஒரு காட்சியை உண்மை என நம்பி, கிரண் பேடி ட்விட்டரில் ஷேர் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் கிரண் பேடி. தைரியம் நிறைந்த அவர் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்றப் பின் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு புதுச்சேரி துடைநிலை ஆளுநர் பதவியும் வழங்கப்பட்டது. தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட அவர் சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

ஐபிஎஸ்ஆ இருந்தீங்களே? உங்களுக்கு இவ்வளவுதான் அறிவா? கிரண்பேடியை வச்சி செய்த நெட்டிசன்கள் 1

விளம்பரம்

 

சமீபகாலமாக அவர் சமூக வலைத்தளங்களில் உலா வரும் போலி வீடியோக்களை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளி வருகின்றனர். அந்த வகையில் நேற்று அவர் மற்றொரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் வானில் பறந்து வரும் ஹெலிகாப்டரை கடலில் இருந்து தாவிச்சென்று சுறா மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் செல்வது போன்ற காட்சியை பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு கீழே இந்த அரிய வீடியோவுக்காக நேஷனல் ஜியோகிராபி சேனல் 1 மில்லியன் டாலர் கொடுத்துள்ளதாகவும் எழுதப்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  தேவையற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே சுஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி! வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேச்சு!!

ஐபிஎஸ்ஆ இருந்தீங்களே? உங்களுக்கு இவ்வளவுதான் அறிவா? கிரண்பேடியை வச்சி செய்த நெட்டிசன்கள் 3

ஆனால் இந்த வீடியோ 2017ல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான “ஃபைவ் ஹெட்டட் ஷார்க் அட்டாக்” என்ற படத்தில் வரும் ஒரு காட்சியாகும். இதனை உண்மை என நினைத்து கிரண்பேடி ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கிரண்பேடியை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஒரு பள்ளி மாணவனை அழைத்துக் கேட்டால் கூட இது போலி வீடியோ என சொல்லிவிடுவான், ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், துணை நிலை ஆளுநராக இருந்தவருக்கு இந்த அறிவு கூட இல்லையா என்று அந்த ட்வீட்டில் கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். காமெடியாக உள்ள அவரின் ட்வீட்டை நீங்களும் காண.. Twitter original Source from: Kiran Bedi

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment