சிவாங்கி லூசு, குரங்கு..தியேட்டர் வாசலில் ஷிவாங்கியை கழுவி ஊற்றிய நபர் | Don Movie Review

டான் படத்தில் நடித்த சிவாங்கியை லூசு, குரங்கு என ஒருவர் திட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. தனது வித்தியாசமான குரலாலும்,குழந்தை போன்ற சுட்டித்தனங்களாலும் அனைவராலும் விரும்பப்பட்டார். இதனால் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் அஸ்வினுடன் இணைந்து செய்த காமெடி கலாட்டாக்கள், Crush என செய்த குறும்புகள் பார்க்கவே மிக அழகாக இருக்கும். இதனால் இன்னும் பிரபலமானார் ஷிவாங்கி. இவருக்கு சில படங்களில் பிண்ணனி பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

சிவாங்கி லூசு, குரங்கு..தியேட்டர் வாசலில் ஷிவாங்கியை கழுவி ஊற்றிய நபர் | Don Movie Review 1

விளம்பரம்

தற்போது இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து கொண்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள டான் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலர் வெளியான போது சிவாங்கி கொடுத்த ஒரு எக்பிரசனை வைத்து பலரும் அவரை கலாய்த்து தள்ளினர். அவர் முகத்தை மார்பிங் செய்து மீம்ஸ்களை மறக்க விட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று படத்தை பார்த்துவிட்டு ஒருவர் சிவாங்கியை திட்டி தீர்த்துவிட்டார். சிவாங்கியை ரசிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் மத்தியில் அவரை அதே அளவிற்கு ஒரு கூட்டம் வெறுக்கவும் செய்கிறது. Embed credits: Cineulagam

சிவாங்கி லூசு, குரங்கு..தியேட்டர் வாசலில் ஷிவாங்கியை கழுவி ஊற்றிய நபர் | Don Movie Review 3

விளம்பரம்

 

தொடர்புடையவை  பலரை ரிப்போர்ட் அடித்த சின்மயி..சின்மயிக்கு எதிராக இன்ஸ்டாகிராம் செய்த செயல்😱 பரிதவிக்கும் சின்மயி🙄

படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர் ஒருவரிடம் சிவாங்கி குறித்து கேட்கப்பட்டது, அப்போது கடுப்பான அவர், சிவாங்கி லூசு, குரங்கு என கடுமையாக திட்டினார். மேலும் அந்த பொண்ண அடுத்த தடவ திரையில பாத்தா ஸ்கிரீன எல்லாம் கிழிச்சுடுவேன் என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்தார். படத்தில் கேவலமாக இருந்தார், அந்த பொண்ணு நல்லா பாடும், பாடுறது புடிக்கும் இனிமே நடிக்க வேணாம்ன்னு சொல்லுங்க என்று கூறினார். சிவாங்கியை அந்த நபர் இவ்வாறு சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார். இதனால் சிவாங்கியின் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். Watch the below video

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment