54 ரன்கள் வித்தியாசத்தில் SRH’ யை வீழ்த்தி KKR அபாரம். பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிப்பு.

ஐ.பி.எல் 2022, நேற்று நடைபெற்ற 61ஆவது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத்தின் SRH’உம் கொல்கத்தாவின் KKR’உம் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்ய தொடங்கின KKR அணி வீரர்கள் அனைவரும் கணிசமான பங்களிப்பை கொடுத்தனர்.ரஹானே 28 ரன்களுடன்,நிதிஷ் ராணா 26 ரன்களுடனும்,சாம் பில்லிங்ஸ் 34 ரன்களுடனும் ஆடம் இழக்க, பின்னர் களம்  இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரசல் 28 பந்துகளில் 49 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்கலாம் இருந்தார். இதில் 4 சிக்ஸர், 3 பௌண்டரி அடங்கும். KKR அணி மொத்தம் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. SRH அணி சார்பில் உம்ரன் மாலிக் 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். நடராஜன்,புவனேஸ்வர் குமார்,மார்கோ ஜென்சன் தலா ஒரு விக்கெட் விழித்தினர்.

54 ரன்கள் வித்தியாசத்தில் SRH' யை வீழ்த்தி KKR அபாரம். பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிப்பு. 1

விளம்பரம்

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய SRH அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 43 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில், பின்னர் வந்த வீரர்கள் யாரும் சிறப்பாக ரன்கள் எடுக்காத காரணத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. மார்க்ரம் தனியாக நின்று போராடி பார்த்தும் பயன் அளிக்கவில்லை. அவர் தன்னுடைய பங்கிற்கு 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடர்புடையவை  இப்போதைக்கு ரிஷப் பந்த் மட்டும் தான் அணியில் ரோஹித் வெளிப்படை!!

KKR அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.டிம் சௌதீ 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ்,சுனில் நரேன் மற்றும் வருன் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பிக்க செயல்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்ட விருதினை பெற்றார்.

விளம்பரம்

இந்த வெற்றியின் மூலம்  KKR அணி 6 வெற்றிகளுடன் இன்னமும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. DC,KKR & PBKS அணிகள் 6 வெற்றிகளுடன் முறையே 5,6,7 இடங்களில் உள்ளன.

விளம்பரம்

Leave a Comment