தனுஷ்க்கு நடந்த சோகம்..!! அடிமேல் அடி..பாவம்யா தனுஷ்..சோகத்தில் ரசிகர்கள் | Dhanush

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் இளைய மகன் நடிகர் தனுஷ். இவர் சிறு வயதிலேயே திரைப்படத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்த போதிலும் தற்போது பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் பாடுவது, பாடல் எழுதுவது, நடனம், படத்தயாரிப்பு என அனைத்திலும் சாதனை படைத்து வருகிறார் நடிகர் தனுஷ் அவர்கள். இவர் படங்களை தயாரிப்பதற்காக கடந்த 2010ம் ஆண்டு வொண்டர்பார் ஃபிலிம்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.

தனுஷ்க்கு நடந்த சோகம்..!! அடிமேல் அடி..பாவம்யா தனுஷ்..சோகத்தில் ரசிகர்கள் | Dhanush 1
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு படங்களை தயாரித்து வந்தார். மூன்று, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி, மாரி2 போன்ற படங்களை இந்த நிறுவனம் மூலமே தயாரித்துள்ளார் தனுஷ். இதன் யூடியூப் சேனல் பக்கத்தை மர்ம நபர்கள் தற்போது ஹேக் செய்துள்ளனர். 5 மில்லியன் பின் தொடர்பவர்களைக் கொண்ட வொண்டர்பார் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், பல பாடல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தனுஷ் அறிவித்துள்ளார். Youtube Video Code Embed Credits: News7 Tamil

விளம்பரம்
தொடர்புடையவை  நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க ஓடோடி வந்த ஷாருக்கான்.! முத்தமிட்டு வழியனுப்பிய நயன்.!

தனுஷ்க்கு நடந்த சோகம்..!! அடிமேல் அடி..பாவம்யா தனுஷ்..சோகத்தில் ரசிகர்கள் | Dhanush 3

இந்த பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்த மாரி 2 படத்தின் பாடல்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ரவுடி பேபி பாடல் 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று இருந்தது. அந்த பாடல்களும் அழிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள தனுஷ் இன்று காலை யூடியூப் சேனல் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுவிட்டது. விரைவில் மீட்கப்படும் என்றும் யூடியிப்பிடம் கோரிக்கை வைத்துள்ளதையும், அவர்கள் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தனுஷ் பதிவிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment