மணிமேகலை பர்த்டேக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த ஹுசைன்..கணவன் மனைவினா இப்படி இருக்கனும்

சின்னத்திரையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கிய மணிமேகலைக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். மூன்று சீசன்களாக கோமாளியாக வந்து அசத்தி வருகிறார். இவர் குடும்பத்தை மீறி ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடன இயக்குநராக இருந்த ஹுசைனின் நடனத்தில் மயங்கி அவரைத் தேடி ஹைதராபாத் வரை சென்று காதலை சொன்னவர் மணிமேகலை.
மணிமேகலை பர்த்டேக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த ஹுசைன்..கணவன் மனைவினா இப்படி இருக்கனும் 1
திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தின் சப்போர்ட் இல்லாமல் இருவரும் கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறியுள்ளனர். தனது சொந்த உழைப்பில் கார், நிலம் என வாங்கி அதை தனது யூடியூப் சேனலில் பதிவேற்று வருகிறார். இவரும் ஹுசைனும் இணைந்து செய்யும் சேட்டைகளை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். இவர்களின் இந்த வீடியோக்களை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புது வீடியோ ஒன்றை மணிமேகலை வெளியிட்டுள்ளார். அதில் மணிமேகலைக்கு பிறந்த நாளுக்காக அவரது கணவர் ஹுசைன் சர்ப்ரைஸ் பார்ட்டி செய்துள்ளார். Youtube Video Code Embed Credits: Hussain Manimegalai
மணிமேகலை பர்த்டேக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த ஹுசைன்..கணவன் மனைவினா இப்படி இருக்கனும் 3
பர்த்டே சர்பிரைஸ் பண்ணுடா பண்ணுடா என்று கணவனிடம் கெஞ்சினார் மணி. ஆனால் ஹுசைன் மிகவும் சர்பிரைஸாக அதில் குதிரை வண்டி ஒன்றை தயார் செய்து அதன் மீது ஏறி மணிமேகலையை கேக் வெட்ட செய்துள்ளார். மேலும் கேக்கின் மீது “மேக்கப் மேகலா” என்றும் எழுதி மரணமாக கலாய்த்துள்ளார். அவர்கள் செய்துள்ள அந்த க்யூட் வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்

Leave a Comment