முதல் முதலில் தமிழ்நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பொழுது அதில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் தான் சினேகன்.! 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்கு தெரிந்த ஒரு பாடலாசிரியர், கவிஞர் என்றால் அது கவிஞர் சினேகன் என்றே குறிப்பிடலாம்! இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர்தான் இவரா இந்த பாடல்கள் எல்லாம் எழுதியுள்ளார் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன விதம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார்.

இருந்தபோதிலும் கடுமையாக போட்டியை விளையாடி இரண்டாவது இடத்திற்கு வந்தார்! மேலும், உலக நாயகன் கமலஹாசனின் அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில் அவருடன் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து கரம்பிடித்தார். கமலஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது இவர்களின் திருமணம். இருவருக்கும் 10 வயது வித்தியாசம் என்ற போதிலும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Galatta Tamil

இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் க்யூட்டாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளிட்டுள்ளனர். அதில் சினேகன் கன்னிகாவிற்கு முத்தம் கொடுக்க, முத்தம் வேணாம் மாமா எல்லாரும் கெட்ட வார்த்தையில திட்டுறாங்க என்று கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..