என் கண்ணு முன்னாலேயே என் அம்மா எரிஞ்சு..பேச முடியாமல் கதறி அழுத நாஞ்சில் விஜயன் | Nanjil Vijayan

ஒருவரை சிரிக்க வைப்பது என்பது சுலபமல்ல. சற்று கடினமான வேலை. அந்த கடினமான வேலையை முழுத் தொழிலாக கொண்டு பலரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் நாஞ்சில் விஜயன். நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்த இவர் தன் திரைத்துறை கனவுகளைத் தேடி சென்னைக்கு வந்தார். அங்கு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இன்று ஒரு சொகுசு கார் வாங்கும் அளவிற்கு தன்னுடைய உழைப்பாலும், திறமையாலும் முன்னுக்கு வந்துள்ளார் நாஞ்சில் விஜயன்.

என் கண்ணு முன்னாலேயே என் அம்மா எரிஞ்சு..பேச முடியாமல் கதறி அழுத நாஞ்சில் விஜயன் | Nanjil Vijayan 1

விளம்பரம்

இது குறித்து தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டபோது, ஈவிபி சிட்டியில் ஷூட்டிங் முடிந்து கிளம்ப நள்ளிரவு ஆகிவிடும், அங்கிருந்து நான் தங்கியிருக்கும் வடபழனிக்கு செல்ல டாக்ஸி கிடைக்காது. இதனால் என்னுடைய சக நடிகரிடம் காரில் என்னை வடபழனியில் ட்ராப் செய்யுங்கள் என்று உதவி கேட்ட போது அவர் மறுத்துவிட்டார். அப்போது தான் எனக்கு இந்த உணர்வு தோன்றியது. நம் வாழ்க்கையும் ஒரு நாள் மாறும் என்று. இப்போது அது நிறைவேறிவிட்டது என்று நாஞ்சில் விஜயன். மேலும் அவரிடம் இந்த காரில் யாரை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று ஆசை உள்ளது என்று கூற என் அம்மா என்று சொல்லி துக்கம் தாங்காமல் அழுதார். Youtube Video Code Embed Credits: Behindwoods TV

என் கண்ணு முன்னாலேயே என் அம்மா எரிஞ்சு..பேச முடியாமல் கதறி அழுத நாஞ்சில் விஜயன் | Nanjil Vijayan 3

விளம்பரம்

மேலும் சிறு வயதிலேயே தன்னுடைய தாயார் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு இறந்துவிட்டார் என்றும், கருகிய அவரது உடலை வாழை இலையில் வைத்து ஆட்டோவில் தூக்கி சென்ற நிகழ்வையும் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் கார் வாங்கிய பிறகு நேரே அம்மாவின் போட்டோவுக்கு அருகில் சென்று அம்மா புது கார் வாங்கி இருக்கேன், வறீங்களா என்று கேட்டேன் எனவும் கூறினார்..வாழ்வில் பல அவமானங்களை சந்தித்து விட்டேன் என்றும், அழுவதற்கு இனி கண்களில் கண்ணீர் இல்லை என்றும் கூறினார். தன்னம்பிக்கையும், திறமையும், கடின உழைப்பும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதற்கு நாஞ்சில் விஜயனும் ஒரு சான்று. பல பேரை சிரிக்க வைத்த நாஞ்சில் விஜயனின் சோகங்கள் நிறைந்த கதையை அவரே கூறுகிறார்.. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

தொடர்புடையவை  அசீம் மாதிரி கேவலமா பேசிட்டு உள்ள இருக்கத்துக்கு வெளியே வந்தது Happy.! VJ மஹேஸ்வரி பேட்டி

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment