மனதை வருடும் “போர்க்கண்ட சிங்கம்” பாடல்!!விக்ரம் படத்தின் 2வது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!!!

4 வருடங்கள் பிறகு நடிகர் கமல் திரையுலகிற்கு திரும்புகிறார். இளம் வெற்றி இயக்குனரும், கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சிறப்பு தோற்றத்தில் சூர்யா, செம்பன் வினோத் என நட்சத்திர பட்டாளங்கள் கூட்டணியில் கமலே தயாரிக்கும் “விக்ரம்” படம் தான் இன்றைய தமிழ் திரையுலகின் ஹாட் நியூஸ்.

மனதை வருடும் "போர்க்கண்ட சிங்கம்" பாடல்!!விக்ரம் படத்தின் 2வது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!!! 1

விளம்பரம்

ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு கடந்த சில வாரங்கள் முன்பு நடைபெற்றது. ட்ரையிலர் குறிப்பாக வெளியாகி மிக பெரிய ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. உண்மையில் ஒரு கமலின் படம் இந்த அளவிற்கு ரசிகர்கள் எதிர்பாக்கும் படமாக வெளிவர இருப்பது நீண்ட வருடங்களில் இதுவே ஆகும்.

ரஜினியை போல் இல்லாமல், மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வந்த கமல், இப்போது கமர்சியல் படமாக இதனை முடித்துள்ளார். இந்த தலைமுறை பெரிதும் பார்த்திராத கமர்சியல் நாயகன் கமலை இந்த படம் மீண்டும் வெளிக்கொண்டு வரும் என கமலின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "அண்ணே கொஞ்சம் இருண்ணே.....பேசவிடாமல் தடுத்த மன்சூர்....அலப்பறையை கூட்டிய சுரேஷ்"

இரண்டு வாரங்கள் முன்பு வெளியான “பத்தல பத்தல” என்ற பாடல் பெரும் வெற்றியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. கமல் எழுதி, பாடியுள்ள இந்த பாடலில் சில வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் உள்ளது. இது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சேர்ந்த இங்குள்ள கட்சி நிறுவகத்தினருக்கு கொஞ்சம் கசப்பை கொடுத்தது.

மனதை வருடும் "போர்க்கண்ட சிங்கம்" பாடல்!!விக்ரம் படத்தின் 2வது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!!! 3

விளம்பரம்

இருப்பினும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு முழுசாக இறங்கியுள்ளது. கமல் முமபை சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளை செய்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், கமலின் மற்றொரு பக்கத்தை படக்குழு இவளோ நாள் வெளிக்காட்டவில்லை.

இன்று வெளியாகியுள்ள “போர் கண்ட சிங்கம்” என்ற பாடல் மனைவியை இழந்து கை குழந்தையுடன் இருக்கும் கமலை பற்றி மென்மையாக படுகிறது. பாடலின் ஒவ்வொரு ஷாட்டிலும் கமல் ஏன் தன்னை உலகநாயகன் என கூறுகிறார்கள் என்பதை நிரூபித்துள்ளார்.

விளம்பரம்

படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில், அன்பறிவு ஆக்ஷன் மாஸ்டராக, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்ய, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்க்கு பிறகு கமல் மீண்டும் மும்முரமாக படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  ராமராஜன் நடிக்கும் பான் இந்தியா படம்.! 'சாமானியன்' படத்தின் டீஸர் வெளியானது.!

விளம்பரம்

Video Courtesy – SonyMusicSouth

விளம்பரம்

Leave a Comment