முதலீடுகளுக்கு இந்தியா சிறந்த நாடு! நிர்மலா

உலகில் எந்த பகுதியில் தேடினாலும் இந்தியாவை போன்ற ஜனநாயகத்தை விரும்பும் சிறந்த இடம் கிடைக்காது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் முதலிட்டாலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அதில், முதலீட்டுகளை அதிகப்படுத்த்தும் நோக்கில் அனைத்ததையும் சீர்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

விளம்பரம்

மேலும், சமகாலத்தில் இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. திறமையான மனிதவளத்தையும், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தேவையானதை தொடர்ந்து செய்து வரும் ஒரு அரசாங்கத்தையும் இந்தியா கொண்டுள்ளது. எல்லாவற்றையும் விட மேலாக ஜனநாயகம் எங்களிடம் இருக்கிறது.

முதலீடுகளுக்கு இந்தியா சிறந்த நாடு! நிர்மலா 1

இந்தியா போன்ற வெளிப்படையான மற்றும் திறந்த சமூகத்தில் நிச்சயமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வசதியாக இருக்கும். எனவே இந்தியாவை விட சிறந்த நாடு வேறு ஏதும் இருக்காது. ஜனநாயகத்தை நேசிக்கும் நாடு. மேலும் முதலாளித்துவத்திற்கு சிறந்த முக்கியத்துவம் இந்தியாவில் அளிக்கப்படும்.

விளம்பரம்
தொடர்புடையவை  Uber Eats நிறுவனத்தை 2000 கோடிக்கு கையகப்படுத்திய Zomato

இந்திய அரசு வாரம்தோறும் முதலீட்டாளர்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடம் உரையாடி வருகிறது. அவர்களிடம் இருக்கும் நம்பிக்கை பற்றாக்குறையை போக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி நிதி பற்றாகுறையை பராமரிக்க அரசு உறுதியுடன் செயல்படுகிறது.

அதே போல், மக்களிடம் பண புழக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் கிராமங்கள் வரையிலும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு தேவையான பணம் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் நுகர்வு தன்மை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment