“நீ நாயுடன் தான் சாக போற”!! ரசிகரின் திமிருக்கு செக் வைத்த சமந்தா!!!

நடிகை சமந்தா திரையுலகில் எந்த பின்புலமும் இன்றி, தாங்கவே முயன்று நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். ஒரு படத்தில் நடிப்பதற்கு இவருடைய சம்பளம் கிட்டத்தட்ட 1 முதல் 2 கோடி வரை என கூறப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இவர் காதலித்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை  மணமுடித்து நான்கே ஆண்டுகளில் திடீரென நாங்கள் சுமுகமாக பிரிகிறோம் என கூறி விவகாரத்து பெற்றார். இது பெரும் அதிர்ச்சியை திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கொடுத்தது. ஆனால் அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விஷயம் என்பதாலும் அவர்களுடைய முடிவிற்கு மதிப்பு கொடுத்ததும் அவர்களது குடும்பமும் இதனை ஏற்று கொண்டது.

விளம்பரம்

“நீ நாயுடன் தான் சாக போற”!! ரசிகரின் திமிருக்கு செக் வைத்த சமந்தா!!! 1

விவாகரத்து ஆனா பின்னர், இவர் முதல் தோற்றமாக நடிகர் அல்லு அர்ஜுனின் “புஷ்பா” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். படத்தை விட இந்த பாடல் தான் பெரிதும் பேசப்பட்டது. நடுவில் அமேசான் ப்ரிமின் தொடரான “தி பேமிலி மேன் 2” தொடரில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்து அனைவரையும் மிரட்டினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மிக்கிஆர்தர் இலங்கையின் புதிய தேசிய கிரிக்கெட் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.

இப்பொது இவர் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். நடிகர் விஜய் தேவரக்கொண்ட நடிப்பில் “குஷி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இது போக இவர் ஹிந்தி படங்களிலும் சிலவற்றில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

இப்பொது விவாகரத்துக்கு பிறகு தனிமையில் வாழும் இவர், தான் வளர்க்கும் நாய், பூனை போன்றவற்றுடன் கொஞ்சி விளையாடி அவ்வப்போது போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். உடற்பயிற்சியில் முக்கிய கவனம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

விளம்பரம்

“நீ நாயுடன் தான் சாக போற”!! ரசிகரின் திமிருக்கு செக் வைத்த சமந்தா!!! 3

அண்மையில் ரசிகர் ஒருவர் இவ்வாறு தனிமையில் இருக்கும் இவர் எப்போது நாய்களுடனும், பூனைகளுடனும் விளையாடி வருகிறதால், அவர் “நீ கடைசில நாயையோட தான் சாக போற!!” என எழுதி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இது கொஞ்சம் சமந்தா ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. அவர்கள் பலரும் திட்டி வந்த நிலையில், இதற்கு செருப்படி பதிலை நடிகை சமந்தா அந்த ரசிகருக்கு கொடுத்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கெத்து காட்டிய கமல் ரகுமான்..விழாவை புறக்கணித்த நயன்தாரா..என்ன காரணம் தெரியுமா? | Cannes Festival

“அவ்வாறு எனக்கு நடந்தால், நான் லக்கி” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை சமந்தாவின் ரசிகர்கள் மட்டுமின்றி போது ரசிகர்களும் ஆதரித்து வருகின்றனர்.

“நீ நாயுடன் தான் சாக போற”!! ரசிகரின் திமிருக்கு செக் வைத்த சமந்தா!!! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment