ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் எதிர்பார்ப்பும் இப்போது கொண்டுள்ள ஒரே படம் விக்ரம். நடிகர் கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு திரையில், அதுவும் அவர் பல வருடங்களாக செய்திராத மாஸ் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் என்பதே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்தது. இதற்கு இன்னும் வலு சேர்க்க படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என இரண்டு மாபெரும் இந்த தலைமுறையின் சிறந்த நடிகர்கள் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிடித்தமான இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், வெறித்தனமாக இசையமைக்கும் அனிருத் இசையமைக்க மாபெரும் கூட்டணியில் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் இந்த படம் ஈர்த்துள்ளது.
சிறிது காலம், அரசியல் பக்கம் சென்ற கமல், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கோவையில் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோற்றார். இருப்பினும் தொடர்ந்து மக்கள் பணியில் அவருடைய மக்களை நீதி மையம் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மீண்டும் திரையுலகில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கமல், நடிப்பது மட்டுமின்றி படங்களில் தன்னுடைய ராஜ் கமல் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் துவங்கியுள்ளார்.

முதல் படமாக நடிங்கர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கூட்டணியில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் ஏற்கனவே அறிவிக்கப்ட்டுள்ளது. அதே போல தங்களுடைய நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்கும் படி அணுகிய போதே, சூர்யாவிற்கு விக்ரம் படத்தில் சிறப்பு கதாபாத்திரம் கிடைத்தது. இதனால் ஏறக்குறைய அவரும் அந்நிறுவனத்தில் படம் நடிக்க போவது உறுதி தான்.

இப்போது பல ரசிகர்களும் விக்ரம் படத்தில் நீட்சியாக அடுத்தடுத்த பாடங்கள் வெளிவர உள்ளன. அதற்கு வழி வகுக்கவே சூர்யா இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். எனவே அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் நடிகர் விஜயுடன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது என்பதால் ரசிகர்கள் அந்த படமும் இந்த படங்களுடன் தொடர்புடன் இருக்குமா? என பல்வேறு கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

இப்பொது விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக மலேஷியா சென்றுள்ள கமல் பேட்டியாளராகளையும், ரசிகர்களையும் சந்தித்து பேசினார். அப்போது ஒருவர், “சார் நீங்களும் விஜய் சார்’உம் இணைய வாய்ப்புள்ளதா?” என கேட்டார், கமலும் உடனே, “தளபதி ஐயா மனசு வெச்ச பண்ணிடலாம்” என கூற பெரும் கரகோஷங்கள் கேட்டன.
லோகேஷ் அவ்வாறான இணைப்பு கதையை விஜயுடன் இயக்கி பின்னர் அவரை கமலுடன் ஒரு படத்தில் இணைப்பாரா? இல்லை கமலின் விண்ணப்பத்தின் பேரில் நடிகர் விஜய் ராஜ் கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கமல் மும்முரமாக உள்ளார். டெல்லி, மும்பை, ஹைதராபாத், மலேஷியா, என சுற்றி சுற்றி படத்தை ப்ரொமோட் செய்து வருகிறார். படம் வருகிற வெள்ளியன்று பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது.
Video courtesy – GalattaTamil