ஒரு தாயா கேக்குறேன்..தயவுசெஞ்சு பைத்தியம்னு மட்டும் சொல்லாதீங்க…வேதனையில் ஸ்ரீநிதி தாய்

சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பெயர்தான் ஸ்ரீநிதி. பல சர்ச்சை பேச்சுகளும், தனது நெருங்கிய தோழியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதுகுறித்து அவரது அம்மா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஸ்ரீநிதியின் தோழிகளே அவரை மெண்டல் மெண்டல் என்று தொடர்ந்து கூறியதால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளானதாக அவர் கூறினார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீநிதி சிறு வயதிலேயே கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிறகு 7C தொடரில் கேபி போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வீடியோ கீழே உள்ளது.

ஒரு தாயா கேக்குறேன்..தயவுசெஞ்சு பைத்தியம்னு மட்டும் சொல்லாதீங்க...வேதனையில் ஸ்ரீநிதி தாய் 1

விளம்பரம்

பின்னர் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியான தோழி நட்சத்திரா பற்றி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டார். நட்சத்திராவுக்கு நிச்சயம் ஆன பையன் குறித்தும், அவர்களது குடும்பம் குறித்து ஸ்ரீநிதி பேசியது சர்ச்சையானது. அதற்கு முன்பே வலிமை குறித்து பேசியது, சிம்பு தன்னை காதலிக்கிறார் என்று கூறி அவரது வீட்டிற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இது போன்ற செயல்களால் ஸ்ரீநிதிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Cinema Vikatan

ஒரு தாயா கேக்குறேன்..தயவுசெஞ்சு பைத்தியம்னு மட்டும் சொல்லாதீங்க...வேதனையில் ஸ்ரீநிதி தாய் 3

விளம்பரம்

ஆனால் ஸ்ரீநிதியின் தாயார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வலிமை படம் குறித்து அவர் கருத்து சொன்னதில் எந்த தப்பும் இல்லை, ஆனால் அங்கிருந்து தான் மன அழுத்தம் தொடங்கியது என்றும், அவள் உயிருக்கு உயிராய் நினைக்கும் தோழிகளே பைத்தியம் என்று சொல்லும் போது அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று ஸ்ரீநிதி தாயார் வேதனையுடன் கூறினார். மேலும் தான் கணவனை இழந்து இரு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், பெரிய பெண்ணுக்கு வாய் பேச முடியாதவர் என்றும், தற்போது ஸ்ரீநிதி விஷயத்தால் தனக்கு இன்னும் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கூறினார். மேலும் மனநிலை சரியில்லாதவரைக் கூட பைத்தியம் என்று சொல்லாதீர்கள் என்று நாதழுதழுக்க கூறினார். அவரது முழு பேட்டியை நீங்களும் காண..Watch the below video..

தொடர்புடையவை  "போருக்கு தயாராகுங்கள்" லியோ படத்திலிருந்து வெளியான தமிழ் போஸ்டர் இதோ.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment