ஏழைகளின் பசியாற்ற, சத்தமில்லாமல் பாண்டி செய்து வரும் காரியம்.. Hats Off பாண்டி

2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலை யாரும் மறந்திருக்க முடியாது. 90 கிட்ஸ்களுக்கு ரொம்ப பிடித்தமான நிகழ்ச்சி என்றால் அது கனா காணும் காலங்கள் தான். அதில் காமெடியனாக நடித்திருப்பவர் தான் பாண்டி. அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ளார் ஆனால் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது அங்காடித் தெரு படம்தான். பிறகு ஒரு சில படங்களில் நடித்த பாண்டிக்கு திரைத்துறை பெரிய அளவில் கைக் கொடுக்கவில்லை. ஆனாலும் இவர் யாருக்கும் தெரியாமல் ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் செய்து வரும் சேவைதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே உள்ளது.

ஏழைகளின் பசியாற்ற, சத்தமில்லாமல் பாண்டி செய்து வரும் காரியம்.. Hats Off பாண்டி 1

விளம்பரம்

“உதவும் மனிதம்” என்ற அமைப்பை உருவாக்கி வாரம்தோறும் பலருக்கு உணவளித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பை தொடங்கிய பாண்டி கொரோனா ஊரடங்கு காலத்தில் சுமார் 4800 குடும்பங்களுக்கு உணவுக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த அமைப்புக்கு பண உதவி வழங்கி வருகிறார் இயக்குனர் சமுத்திரகனி. வாரந்தோறும் 250 பேர் வரை உணவு வழங்கி வருவதாகவும், தானம் பெறுகிறோம் என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக ஹோட்டல் சாப்பாடு போலவே ஸ்வீட்டுடன் மீல்ஸ் சாப்பாடு போல செய்து கொடுக்கிறார் பாண்டி. இது மட்டுமில்லாமல் மருத்துவ உதவி, கல்வி உதவி, ரத்ததானம் என பல உதவிகளை இந்த அமைப்பின் மூலம் உதவி வருகிறார். Youtube Video Code Embed Credits: Cinema Vikatan

ஏழைகளின் பசியாற்ற, சத்தமில்லாமல் பாண்டி செய்து வரும் காரியம்.. Hats Off பாண்டி 3

விளம்பரம்

மேலும் ஈமக்கிரியை கூட செய்ய இயலாதவர்களுக்கு அமைப்பின் மூலம் முன்னின்று உதவி செய்து வருவதாகவும் பாண்டி கூறினார். இந்த அமைப்பில் பலர் உதவுவதால் அவர்கள் செய்யும் உதவி தெரிய வேண்டும் என்பதற்காகவும், இதை பார்த்து பலர் உதவி செய்வதால் அதில் கிடைக்கும் மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று பாண்டி கூறுகிறார். பாண்டியின் தங்கை, தங்கையின் மாமியார், பாண்டியின் அம்மா என அவர்களின் குடும்பமே உணவு சமைத்து இல்லாதவர்களுக்கு வழங்கி வருகிறார் பாண்டி. அவர் தங்கை கூறுகையில் நல்ல அரிசி, செக்கில் ஆட்டிய எண்ணைய் என்று தரமான பொருட்களையே உபயோகித்து வருவதாகவும், நாம் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அந்த வயிறு வாழ்த்த வேண்டும் என்று புன்னகையுடன் கூறுகிறார். திரையில் காமெடியனாக இருந்தாலும் உண்மையிலேயே ஹீரோவாக இருக்கிறார் பாண்டி. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

தொடர்புடையவை  இரட்டை மகன்களுடன் வெளிநாட்டில் நடிகை Nayanthara விடுமுறை கொண்டாட்டம்..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment