மகனாக வெற்றிமாறன் செய்த செயல்..உடைந்து அழுத அற்புதம்மாள்..கண்ணீரில் மூழ்கிய அரங்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர் பேரரறிவாளன். இந்த செய்தியை தமிழகத்தில் இருக்கும் சிறு குழந்தைக்கு கூட தெரியும். அந்த அளவிற்கு தமிழகத்தில் நாள்தோறும் கேட்டுவந்த பிரச்சினையாக இது இருந்தது. 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு பேரறிவாளன் உட்பட 7 பேர் இருந்தனர். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது. இதற்கு மிகவும் பின்புலமாக இருந்தவர் அவரின் தாயார் அற்புதம்மாள். தன் மகனுக்கு தூக்கு தண்டனை அறிவித்த போது பல சட்டத்தின் கதவுகளை தட்டி அதை 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தற்போது மகனுக்கு விடுதலையும் வாங்கி கொடுத்துள்ளார் அந்த தாய்.

மகனாக வெற்றிமாறன் செய்த செயல்..உடைந்து அழுத அற்புதம்மாள்..கண்ணீரில் மூழ்கிய அரங்கம் 1

விளம்பரம்

அப்படிப்பட்ட ஒரு தாயின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்று வெற்றிமாறன் தீர்க்கமான முடிவில் உள்ளார். தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்று அற்புதம்மாளுக்கு இன்சிபிரேஷன் விருது ஒன்றை வழங்கி கௌரவித்து உள்ளது. அந்த விருதை வெற்றிமாறன் தனது கைகளால் வழங்கினார். மேலும் அற்புதம்மாள் தனது வாழ்க்கை முழுவதும் அனைத்தையும் மறந்து மகனுக்காகவே வாழ்ந்தார் என்று சொல்லி ஒரு பட்டுப்புடவையை பரிசாக அளித்தனர். இதை அளிப்பதற்கு முன்பு வெற்றி மாறனை உங்கள் மகனாக நினைத்து இந்த பரிசை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடையவை  கிடைக்காத பட வாய்ப்புகள்..! சீரியலில் ஹீரோவாக களம் இறங்கும் மயில்சாமி மகன்.! ப்ரோமோ இதோ.!

மகனாக வெற்றிமாறன் செய்த செயல்..உடைந்து அழுத அற்புதம்மாள்..கண்ணீரில் மூழ்கிய அரங்கம் 3

விளம்பரம்

மேலும் வெற்றிமாறன் பேசுகையில் இந்த தாயின் போராட்டம், மனதைரியமும் யாருக்கும் வராது. மகனுக்கு தூக்கு தண்டனை வழங்கியபோது கூட தன் மகனை மீட்டு எடுத்துவிடுவேன் என்று அவர் உறுதியாக நம்பியதாக கூறினார். அந்த தைரியம்தான் அவரது மகனை விடுதலை செய்துள்ளது என்று கூறினார். அற்புதம்மாளின் படத்தை எடுக்க இதுவே சரியாண தருணம் என்றும், அது படமா அல்லது தொடராக எடுக்கலாமா என்பது குறித்து யோசித்துக் கொண்டுள்ளதாகவும் கூறினார். அற்புதம்மாளின் காணொலி போடப்பட்டபோது அரங்கமே கண்ணீரில் திளைத்தது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

Video Courtesy: Behindwoods TV

விளம்பரம்

Leave a Comment