என்னது விஜய்டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா? தமிழக அரசில் பதவியில் இருக்கும் ராமர்..வெளிவந்த உண்மை

விஜய் டிவிக்கு பல ஊர்களிலிருந்து வேலைத்தேடி வந்து சின்ன சின்ன ரோல்களில் பணியாற்றி பல உச்சங்களுக்கு சென்றவர்கள் உண்டு. நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன், புகழ் போன்ற பலர் டிவியில் தொடங்கி இன்று வெள்ளித்திரை வரை கலக்கி கொண்டுள்ளனர். அதில் முக்கியமான ஒருவர்தான் ராமர். அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். இதில் பெண் வேடத்தில் இவர் செய்த காமெடிகளை பார்த்து சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் செய்யும் சின்ன சின்ன காமெடிகளும் வைராலகி விடும்.

என்னது விஜய்டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா? தமிழக அரசில் பதவியில் இருக்கும் ராமர்..வெளிவந்த உண்மை 1

விளம்பரம்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வரும் லட்சுமி ராமகிஷ்ணன் போல் இவர் செய்த உலக அளவில் பிரபலமானது. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா என்ற வாசகம் இணையத்தில் தீயாய் பரவியது. இந்த வாசகத்தை வைத்து பாடல்கள் கூட எழுதினர். இதனால் செம்ம கடுப்பில் இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். பிறகு ஆத்தாடி என்ன உடம்பி என்ற பாடலையும் ட்ரெண்ட் செய்து விட்டார். கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு, ராமர் வீடு, கேபிஒய் சாம்பியன்ஸ் என அனைத்து காமெடி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கெடுத்து திறமையை காட்டி வந்தார் ராமர்.

தொடர்புடையவை  தம்பி அக்காவ பாருடா.! தம்பியை சிரிக்க வைக்க Cute ஆக நடித்து காட்டிய ஆலியா மகள் ஐலா.! Cute வீடியோ.!

என்னது விஜய்டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா? தமிழக அரசில் பதவியில் இருக்கும் ராமர்..வெளிவந்த உண்மை 3

விளம்பரம்

தற்போது ராமரைப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மதுரைக்கு அருகில் பிறந்து வளர்ந்த அவர் அதே பகுதியில் ஒரு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) இருப்பதுதான். இந்த விஷயத்தை மதுரை எம்.பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில் மதுரைக்கு ஆய்வுக்கு சென்று இருந்தபோது விஜய்டிவி கலைஞர் சுக்காம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமரை சந்தித்தேன் என பதிவிட்டு இருந்தார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரை நகைச்சுவை கலைஞராக பார்த்து வந்தவர்கள் அவர் ஒரு அரசு அதிகாரி VAO என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

விளம்பரம்

Twitter Source: Su Venkatesan MP

விளம்பரம்

Leave a Comment