தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதி கொள்ள இருக்கும் பிகில் Vs கைதி! குழப்பத்தில் ரசிகர்கள்.!!

தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதி கொள்ள இருக்கும் பிகில் Vs கைதி! குழப்பத்தில் ரசிகர்கள்.!! 1

மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இதில் கார்த்தி 10 வருடமாக ஜெயிலில் இருந்து விடுதலை பெற்று வெளியே வரும் கைதியாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரே இரவில் நடக்கும் கதை என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.அதன்படி கைதி படம் வரும் அக்டோபர் 25ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கார்த்தியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி #KaithiDiwali என்ற ஹாஸ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.

விளம்பரம்

இதே நாளில் தான் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் வெளியாக உள்ளது. அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இவ்விரண்டு படங்களில் எந்த படம் வசூலில் வரி குவிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த இரண்டு படத்தில் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment