“ஹிட்டு முக்கியம் பிகிலே”!! ஷாருக் கானை வைத்து சம்பவம் செய்துள்ள அட்லீ!! மிரட்டும் டீஸர் அறிவிப்பு.

தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் “ராஜா ராணி”. ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளியான இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர் நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் முதல் படத்தை இயக்கி வெற்றியை கண்டவர்.

"ஹிட்டு முக்கியம் பிகிலே"!! ஷாருக் கானை வைத்து சம்பவம் செய்துள்ள அட்லீ!! மிரட்டும் டீஸர் அறிவிப்பு. 1

விளம்பரம்

அடுத்த படமே முன்னணி நடிகர் விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், முள்ளும் மலரும் மஹேந்திரன், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில்,மீண்டும் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளியான “தெறி” படமும் மிக பெரிய வெற்றி. தன்னுடைய சினிமா பயணத்தில் ஒரு சிறப்பான போலீஸ் கதாபாத்திரம் நடித்திராத விஜயுக்கு இந்த படம் அந்த ஏக்கத்தை தனித்ததோடு ரசிகர்களும் மிக பெரிய உற்சாகத்தை கொடுத்தது. 40 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து, அட்லீயை நட்சத்திர இயக்குனராக மாற்றியது.

தொடர்புடையவை  40 ஆண்டு கால நண்பனை வீட்டிற்கே சென்று சந்தித்த கமல், லோகேஷ்..என்ன காரணம் தெரியுமா?

இதே விஜய்-அட்லீ கூட்டணி மீண்டும் “மெர்சல்” என்ற படத்தில், இன்னும் பிரமாண்டமாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயுடன் சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா என பலர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளியான இந்த படம் அது வரை விஜய் படங்கள் செய்திராத பிரமாண்ட வசூலை செய்து தமிழ் சினிமாவின் அப்போதைய மிக அதிக வசூல் செய்த படமாக 260 கோடிக்கு மேல் வசூல் எடுத்து மெகா வெற்றியை கொடுத்தது.

விளம்பரம்

"ஹிட்டு முக்கியம் பிகிலே"!! ஷாருக் கானை வைத்து சம்பவம் செய்துள்ள அட்லீ!! மிரட்டும் டீஸர் அறிவிப்பு. 3

தொடர் வெற்றி படங்கள் விஜய்க்கு கொடுத்து, அவருடைய ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து போன இயக்குனராக மாறி போனார். மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை குறி வைத்து சன் பிக்சரஸ் நிறுவனத்துடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, அம்ரிதா ஐயர், இந்துஜா என பலர் நடிக்க வெளியான இந்த “பிகில்” படம் விமர்சனகர்களிடம் இது பயங்கர காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்று விமர்சிக்க பட்டாலும் மீண்டும் விஜயுடைய அதிக காலெக்ஷன் செய்த படமாக இது உருவெடுத்து. கிட்டத்தட்ட 300 கோடி வசூலை இம்முறை வாரி குவித்தது இந்த படம்.

விளம்பரம்
தொடர்புடையவை  "என் மகன் எனக்கு கொடுத்த மாமருந்து" உருக்கமாக பதிவிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்.!

அடுத்து இவர் என்ன படம் எடுக்க போகிறார் என்ற ஆர்வத்தில் அனைவரும் இருக்கும், ஹிந்தியில் ஷாருக்கானிடம் ஒரு கதையை ஓகே பண்ணி அவருடைய ஒப்புதலுக்காக வெயிட் பண்ணி கொண்டிருந்தார். இப்பொது “பதான்’ படத்தை முடித்துள்ள ஷாருக்கான் அடுத்ததாக இவருடைய படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இப்பொது அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டு ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.

"ஹிட்டு முக்கியம் பிகிலே"!! ஷாருக் கானை வைத்து சம்பவம் செய்துள்ள அட்லீ!! மிரட்டும் டீஸர் அறிவிப்பு. 5

விளம்பரம்

ஷாருக்கானின் “ரெட் சில்லிஸ்” நிறுவனம் சார்பில் அவருடைய மனைவி கௌரி கான் தயாரிக்கும் இந்த படத்திற்கு இப்பொது “ஜவான்” என பெயர் சுடப்பட்டு, ரெஜிஸ்டர் செய்த படிவத்தை படக்குழு இணையத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. பயங்கரமாக விமர்சிக்க பட்டாலும் தொடர் வெற்றி படங்கள் கொடுத்து வரும் அட்லீ, ஹிந்தியிலும் தமிழில் செய்தது போல மாபெரும் வெற்றியை பெற்று வசூலை அள்ளுவார் என ரசிகர் பலரும் காத்து உள்ளனர்.

அண்மையில் படக்குழு படத்தின் டீஸரை தணிகை செய்தது, அப்போது எடுக்கப்பட்ட வெளியான இந்த செர்டிபிகாட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  கார்த்தி இத மட்டும் பண்ணிட்டா நான் சினிமாவை விட்டே போயிடுறேன்.! கிழித்து தொங்கவிட்ட கஞ்சா கருப்பு

"ஹிட்டு முக்கியம் பிகிலே"!! ஷாருக் கானை வைத்து சம்பவம் செய்துள்ள அட்லீ!! மிரட்டும் டீஸர் அறிவிப்பு. 7

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment