“எது லோகேஷ் மல்டிவேர்ஸா?, சீரியல் சங்கமம் தெரியுமா?”!! பங்கமாக கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா, காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஷ்வரி, சந்தான பாரதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளியன்று வெளியான இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று இந்த ஆண்டில் பெரிய நடிகர் ஒருவரின் கொண்டாடக்கூடிய படமாக இது உருவெடுத்துள்ளது. கமலின் 4 ஆண்டு இடைவேளைக்கு பின் வெளியாகும் படம் பலருக்கும் மிகவும் பிடித்து போயுள்ளது. ரசிகர்கள் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா ஆகியோரின் நடிப்பை கொண்டாட தொடங்கியுள்ளார்கள்.

"எது லோகேஷ் மல்டிவேர்ஸா?, சீரியல் சங்கமம் தெரியுமா?"!! பங்கமாக கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்! 1

விளம்பரம்

இந்தியா முழுவதும் 34 கோடி வசூல் செய்துள்ளதாக ஆரம்பத்தில் தகவல் வந்த நிலையில், வெளிநாடுகளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை கமல்ஹாசனின் விக்ரம் படம் நடத்தி வருவதாகவும், உலகம் முழுவதும் 54 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல் வார முடிவிலேயே 100 கோடி வசூலை விக்ரம் படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  "வாரிசு படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா"!! எகிறும் எதிர்பார்ப்பு"!!

விக்ரம் படத்தை பார்பதற்கு முன்னர், கைதி படத்தை பார்த்து விட்டு வாங்க என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசி நேரத்தில் ட்வீட் போட்டு இருந்தார். விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் கைதி படத்தின் சில காட்சிகளும், டில்லியின் சில குறிப்புகளும் கிடைத்து இருந்தன. கைதி 2 மற்றும் விக்ரம் 3க்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் கைதி பட நடிகர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இது லோகி யூனிவர்ஸ் என்றும் மல்டிவர்ஸ் என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தையும் தளபதி 67ல் இணைத்து விடுங்கள் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது

விளம்பரம்

"எது லோகேஷ் மல்டிவேர்ஸா?, சீரியல் சங்கமம் தெரியுமா?"!! பங்கமாக கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்! 3

விக்ரம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தையும் பாசிட்டிவ் விமர்சனத்தையும் கலந்து கட்டி ஒரே குழப்பத்தில் விமர்சித்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன் என அவரது விமர்சனத்தை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், விக்ரம் படம் குறித்த மீம்களாக எடுத்துப் போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜப்பானில் டான்ஸ் ப்ராக்டிஸ் செய்த நாட்டாமை பட ஜோடி..!

கைதியில வந்தவங்க விக்ரம்ல வராங்க இதுக்கு பேருதான் மல்டிவர்ஸ் கான்செப்ஃட்னு அம்மாவிடம் மகன் சொல்ல, இது என்னடா பெரிய மல்டிவர்ஸ், பாக்கிய லட்சுமி வீட்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்தாங்க பாருன்னு சீரியலில் நடக்கும் சங்கமங்களை வைத்து உருவாக்கப்பட்ட மீமை ஷேர் செய்து பதிலுக்கு விக்ரம் படத்தை ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

"எது லோகேஷ் மல்டிவேர்ஸா?, சீரியல் சங்கமம் தெரியுமா?"!! பங்கமாக கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment