பீஸ்ட் படத்தைப் பற்றி படத்தில் நடித்த ஒருவரே கழுவி ஊற்றி வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜும்கானா பாடல்கள் வெளியான போது மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து இருந்தது. அதே போல் ட்ரைலர் வெளியான சில ஒரு நாளில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து இருந்தது. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அனால் படம் வெளியான பின்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 100 நாட்கள் கூட சரியாக ஓடவில்லை. அப்போதே படத்தின் இயக்குனர் நெல்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். விஜய்யின் தீவிர ரசிகர் ஃபேன் பாய் படம் என்று சொல்லிவிட்டு இப்படி ஒரு குப்பை கதையை எடுத்து வைத்துள்ளீர்களே என்று நல்சனை சாடினர்.
இதல்லாம் எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா @Nelsondilpkumar pic.twitter.com/bavVZYr44P
— T H A N G A M (@ThangamAK23) June 14, 2022
நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர், இதனால் இவருடன் இணைந்து விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் படத்தில் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருந்ததால் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வி அடைந்தது. படம் வெளியான மறுநாளே லாஜிக் ஓட்டைகளை எடுத்து சமூக வலைத்தளங்களில் கலாய்த்து தள்ளி வந்தனர் நெட்டிசன்கள். க்ளைமாக்ஸில் விமானம் ஓட்டும் சீன் பலராலும் கலாய்த்து தள்ளப்பட்டது. இந்த சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்து வந்த நிலையில் விக்ரம் படம் பெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சனை மீம் போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
படம் வரதுக்கு முன்னாடி அதே சீன பத்தி நான் விஜய் கிட்ட உருதுல பேசுனேன் ப்ரெஞ்சுல பேசுனேன்னு சொல்லிட்டு சுத்துனப்போ தெரியாததெல்லாம் இப்போ தெரியிதா இவனுக்கு?
படக்கதையையும் சீனையும் கேட்டு ஓகே பண்ணி நடிச்சி அதுக்கு எதிர்மறை விமர்சனம் வந்ததும் படத்துக்கும் தனக்கும்..(1/2) https://t.co/0ocxBUteeY
— ᴸᵉᵍᵉⁿᵈ (@Easwaran_Jeeva) June 14, 2022
தற்போது பீஸ்ட் படத்தைப் பற்றி படத்தில் நடித்த ஒருவரே கழுவி ஊற்றி வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்தவர் மலையாள நடிகரான டாம் ஷைன் சாக்கோ. மலையாள சேனலுக்கு பேட்டி அளித்த அவர் விஜயையும், நெல்சனையும் பீஸ்ட் படத்தையும் கலாய்த்து தள்ளினார். அவர் கூறும் போது, ஏதாவது ஒரு வெயிட்டான பொருளை தூக்கினால் முகத்தில் எக்ஸ்பிரஷன் தெரியும், ஆனால் ஒரு சீனில் விஜய் என்னை கட்டித் தூக்கி வருவார் அப்போது அவர் முகத்தில் ஒரு எக்ஸ்பிரஷன் கூட இருக்காது என்று சொல்லிவிட்டு கேலியாக சிரிக்கிறார். மேலும் படத்தை நான் பார்க்கவேயில்லை, மீம்ஸ் மட்டுமே பார்த்தேன் என்றும் கூறினார்.

பீஸ்ட் படம் தமிழில் உங்களுக்கு நல்ல என்ட்ரி என நினைக்கிறீர்களா? என்றி கேட்க, இந்த படமே தமிழ் சினிமாவிற்கு நல்ல என்ட்ரி இல்லை என்று கூறினார். பீஸ்ட் படத்தை மற்றவர்கள் கலாய்த்து மீம்ஸ் போட்ட காலம் போய் படத்தில் நடித்த நடிகரே கலாய்த்து தள்ளியது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.
