2012ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனராக விக்னேஷ் சிவன் அறிமுகமான படம் “போடா போடி”. இந்த படத்தின் மூலம் தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவர் சரகுமாரின் மகளாகவே ரசிகர்களிடம் அறிமுகமானரே தவிர அவருக்கென தனியாக நல்ல பெயரை எடுக்க முடியவில்லை. ஆனால் சிறந்த அறிமுக நடிகையாக விஜய் டிவி விருதை இவர் வாங்கினார். பின்னர் அடுத்த படமாக விஷாலுடன் “மதகஜ ராஜா” நடித்தார். அந்த படம் இன்றளவும் வெளியாகாமல் உள்ளது. இதற்கு நடுவில் கன்னடத்தில் சுதீப்புடன் ஒரு படத்தில் கன்னட திரையுலகிலும் நாயகியாக அறிமுகமானார்.

தனக்கென ஒரு அடையாளத்தை தேடி வந்த இவருக்கு இயக்குனர் பாலாவின் ‘தாரை தப்பட்டை” படம் அந்த ஏக்கத்தை தனித்தது. கரகாட்டக்காரியாக இந்த படத்தில் சசிகுமாருடன் நடித்த இவருடைய அசத்திய நடிப்பு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளை அள்ளியது. அந்த படத்திற்காக இவர்க்கு SIIMA விருது சிறந்த நடிகைகாக வழங்கப்பட்டது. ஒரு வழக்கமான நாடியாக இல்லாமல் வெளியான இரண்டாவது படத்திலேயே நடிப்பால் அனைவரையும் வசீகரித்தார்.

தாரை தப்பட்டை வெளியான அடுத்த ஆண்டே இவருக்கு மற்றொரு மாபெரும் வெற்றியாக “விக்ரம் வேதா” படம் அமைந்தது. விஜய் சேதுபதி மற்றும் மாதவனின் மிரட்டலான நடிப்பிற்கு மத்தியில் தன்னுடைய அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி நல்ல விமர்சனங்களை பெற்றார். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகையாக பிலிம் பேர் விருது, SIIMA விருது, எடிசன் விருது என பல விருதுகளையும் வாங்கி குவித்தார்.

அதற்கிடையில் மலையாளத்தில் கசபா என்ற படத்தில் அறிமுகமானார். நாயகியாக மக்களை இவர் பெரிதும் கவர்ந்ததை விட வில்லன் நடிகையாக மிகவும் ஈர்த்தார். விஜயுடன் சர்க்கார் படத்தில் முதல் முறை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தோன்றி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்த படமாக மீண்டும் விஷாலின் “சண்டக்கோழி 2” படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று அதிலும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஒரே ஆண்டில் அடுத்தடுத்த படங்களில் வில்லியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி பல விருதிகளையும் வாங்கிக்குவித்தார். இளம் நாயகிகள் பலரும் விஜயுடன் ஜோடியாக நடிப்பதற்கே ஆசைபடுவார்கள். ஆனால் துணிச்சலாக இவர் அவருக்கு வில்லியாக நடித்து ஒட்டுமொத்த சினிமா விமர்சகர்கள் பாராட்டுகளையும் பெற்றார். தெலுங்கிலும் “தெனாலி BA.BL” படத்தில் அறிமுகமானாலும், 2021ஆம் ஆண்டுரவிதேஜா நடிப்பில் வெளியான “கிராக்” படம் அவருக்கு மிக பெரிய வரவேற்பை அளித்தது.

அவ்வப்போது கிடைக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி இவர் நடிப்பில் வெளியான படம் “வெல்வெட் நகரம்”. இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் அப்போது பேசியிருத்த இவர், பல்வேறான தைரியமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதிலும் குறிப்பாக இவருடைய Step-mom ராதிகா குறித்தும் மனம்திறந்து பேசியுள்ளார். நடிகர் சரத்குமாருக்கும் முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர் நடிகை வரலக்ஷ்மி. 2000ஆம் ஆண்டில் இருவருக்கும் விவகாரத்தாக, இரண்டாவதாக சரத்குமார் 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
எப்போதும் ராதிகா பங்குபெறும் நிகழ்வுகளிலும், வரலக்ஷ்மி பங்குபெறும் நிகழ்ச்சிகளிலும் இவருடைய பந்தம் பற்றி நெறியாளர்கள் கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்கள். அந்த பேட்டியில் வரலக்ஷ்மி அது குறித்து மனம்திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், “நான் என் ராதிகாவை அம்மா’னு, என் அப்பாக்கும் அவுங்களுக்கு கல்யாணம் ஆனதால் அவுங்க என் அம்மா ஆகிட முடியாது. நா எப்பவுமே அவுங்களே ஆண்ட்டி தான் கூப்பிடுவேன், ஆனா எங்களுக்கு இருக்குற ரிலேஷன்ஷிப் பத்தி எங்களுக்கு தெரியும், ஆனா நான் அவுங்கள அம்மானு தான் கூப்பிடனும்’னு நீங்க ஏன் எதிர்பாக்குறீங்க” என ஓப்பனாக பதிலத்துள்ளார்.
வீடியோ வெளியாகி ஓரிரு ஆண்டுகள் ஆனாலும் இப்பொது இந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.நீங்களும் அந்த வீடியோ பார்க்க வீடியோவை காண…
Video Courtesy – IndiaGlitz