ஆரம்பத்தில் சிறு சிறு படங்கள் நடித்தாலும் நடுவில் வெளியான “மத யானைக்கூட்டம்” படம் நடிகர் கதிருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்தது. அதன் பின்னர் இவர் நடிப்பில், பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய “பரியேறும் பெருமாள்” படம் நடிகர் கதிருக்கு தமிழ் திரையுலகில் மிக பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அந்த பின் சில படங்கள் அவருக்கு சறுக்கினாலும் இப்பொது அமேசான் ப்ரேம் OTT தளத்தில் இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் “சூழல்” என்னும் வெப் சீரிஸை பாலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்

தமிழில் ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, ‘வ – குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கியுள்ளனர். ‘விக்ரம் வேதா’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் கவனம் பெற்ற இந்த தம்பதியினர் அடுத்ததாக ‘சுழல்’ என்ற இணையத் தொடருக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஜூன் 17-ம் தேதி இந்த தொடர் வெளியாகி ரசிகர்ளின் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகஷன் பாணியில் உருவாகியுள்ள இந்த தொடர் 8 எபிசொடுகளை கொண்டுள்ளது. 6 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த தொடர் சில இடங்களில் கொஞ்சம் தொய்வாக தெரிந்தாலும், மிக பெரிய சஸ்பென்ஸ் கொண்டு, அடுத்தடுத்து என நிகழ் போகிறது என ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

காணாமல் போகும் தன்னுடைய தங்கையை தேடி திரியும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவரை தேடி கொண்டிருக்கும் கதிர் என கதை அமைக்கப்பட்டாலும் இதனிடையே தொழிற்சாலை மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களின் போராட்டம் என்ற கிளைக் கதையும் முன்னெடுக்கப்படுகிறது.சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை, புஷ்கர் காயத்ரியின் எழுத்து, நடிகர்கள் பார்த்திபன், கதிர், ஷ்ரேயா ரெட்டி மற்றும் ஐஸ்வர்யாவின் நடிப்பு என சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


