இளைய தளபதி விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியை அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டு வித்தியாசமாக வாழ்த்துக்களை கூறியுள்ளது ஒரு தயாரிப்பு நிறுவனம். தமிழின் முண்ணனி நடிகர்களில் ஒருவர்தான் விஜய். பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர் ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். இவரது தந்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில், விஜய் தமிழில் 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இதன் பின்னர் விஜயக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே உள்ளது.

பின்னர் 1997ம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் விஜயை முண்ணனி நடிகர்கள் வரிசைக்கு தள்ளியது என்று சொன்னால் அது மிகையில்லை. பின்னர் 2000களின் இறுதியில் குஷி, பிரியமானவளே, ஷாஜகான், யூத், பத்ரி, ப்ரெண்ட்ஸ், போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். பின்னர் திருமலை, கில்லி, திருப்பாச்சி, குருவி, சிவகாசி போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கி கலக்கி எடுத்தார். சமீபத்தில் வெளியான நண்பன், தலைவா, துப்பாக்கி, ஜில்லா, கத்தி, தெறி, பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் விஜய்க்கு அமைந்த வெற்றிப் படங்களாக உள்ளது. அவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த பீஸ்ட் படம் சரியாக ஓடவில்லை.

விஜயை பொறுத்தவரை அனைத்து ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். அப்போது தனது ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மோட்டிவேஷனல் குட்டி ஸ்டோரியை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மாஸ்டர் படம் வெளியானபோது குட்டி ஸ்டோரி என்று நதி போல எதற்கும் பயப்படாமல் துணிந்து ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு கதை சொன்னார். இது பல பேருக்கு பிடித்து இருந்தது. இதை விஜய் ரசிகர்கள. வாட்ஸ் அப் ஸ்டேடஸில் வைத்தனர். தற்போது அந்த கதையை விஜய் வாய்ஸ்-ல் செவன் க்ரீன் நிறுவனம் அனிமேஷனாக வெளியிட்டுள்ளது. நாளை ஜூன் 22 விஜயின் 47வது பிறந்த நாளை கொண்டாடும் உள்ளார். அதற்காக இப்படியொரு வித்தியாசமான வாழ்த்தை கூறியுள்ளது தயாரிப்பு நிறுவனம். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Sevan Green Studios