“5 வருட காதல்..விரைவில் திருமணம் “!!”அதிகாரபூர்வமாக கூறுகிறேன்”!! காதலி பென்சியுடன் ரொமான்டிக் வைப்பில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ்!!

விஜய் டிவியின் பெருமைக்கு அறிமுகங்களில் குக் வித் கோமாளி புகழ் நிச்சயம் எப்போதும் இடம் பிடிப்பார். நடிகர் வடிவேலு பாலாஜியால் அந்த தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு? நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அதன் மூலம் ஒரு சின்ன அறிமுகத்தை பெற்றார். இப்பொது விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” முதல் சீசனில் கோமாளியாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அது முதலே ரசிகர்களை கவர்ந்த கலைஞராக மாறிப் போனார் அவர்.

இப்பொது நடைபெற்று வரும் 3வது சீசனிலும் அவர் தான் முக்கிய கோமாளி. கலந்து கொள்ளும் எந்த குக்குடனும் இவருடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதன் காரணத்தால் இவர் மிகவும் ரசிகர்களாலும் கலந்து கொள்ளும் குக்கிற்கும், போட்டி நடுவர்களுக்கும் பிடித்துப்போன கலைஞராகவே உள்ளார்.

விளம்பரம்

"5 வருட காதல்..விரைவில் திருமணம் "!!"அதிகாரபூர்வமாக கூறுகிறேன்"!! காதலி பென்சியுடன் ரொமான்டிக் வைப்பில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ்!! 1

அந்த நிகழ்ச்சி கொடுத்த அறிமுகம் நடிகர் அஜித்துடன் “வலிமை” படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். நடுவில் அஷ்வினுடன் “என்ன சொல்ல போகிறாய்” என்ற படத்திலும் முக்கிய நபராக நடித்துயிருந்தார். அண்மையில் வெளியான நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான “வீட்ல விஷேசங்க” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  முட்டாளா நீங்க எல்லாம்? சந்துல சிந்து பாடலாம்ன்னு இருப்பீங்களா? மாஸ் காட்டிய பாலா | BB Ultimate Promo 3

 

ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள, புகழ் அடுத்தடுத்து படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். குறிப்பாக விஜய் டிவியின் முக்கிய பிரபலம் ஆகிவிட்ட இவரை விஜய் டிவி தொலைக்காட்சியும் நிறைய ஷோக்களில் களமிறக்கி வருகிறது. அண்மைக்காலமாக நடிகர் புகழ் நிறைய இடங்களில் தான் செல்லும் போதும், சில போட்டோக்களும், விடீயோக்களும் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் இருவரும் காதலர்கள் என பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து புகழே மனந்திறந்து பேசியுள்ளார்.

விளம்பரம்

 

“நானும் பென்சியும் ஐந்து வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். நான் முதன் முதலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் வந்த போதில் இருந்தே எனக்கு அவரை தெரியும் . அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம்” என்று கூறி இருந்தார்.

விளம்பரம்

Video Courtesy – LittleTalks "5 வருட காதல்..விரைவில் திருமணம் "!!"அதிகாரபூர்வமாக கூறுகிறேன்"!! காதலி பென்சியுடன் ரொமான்டிக் வைப்பில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ்!! 3 "5 வருட காதல்..விரைவில் திருமணம் "!!"அதிகாரபூர்வமாக கூறுகிறேன்"!! காதலி பென்சியுடன் ரொமான்டிக் வைப்பில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ்!! 5

விளம்பரம்
தொடர்புடையவை  பாக்யாவை கிண்டல் செய்த கோபி மற்றும் ஈஸ்வரியை வெளுத்து வாங்கும் ராதிகா.! மனம் மாறும் மாமனார்.!

 

விளம்பரம்

Leave a Comment