சின்னத்திரையில் இப்பொது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். சமையல் போட்டியான இதில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு கோமாளிகளாக வருகிறவர்கள் செய்யும் அலப்பறை தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷயமாகும். இதில் கோமாளிகளாக வரும் பாலா,புகழ், மணிமேகலை போன்றோர் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் சிவாங்கி.

சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமாகி அந்த போட்டியின் அரையிறுதி சுற்று வரை சென்று தோல்வியுற்று வெளியேறினார் பாடகி சிவாங்கி. இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட கூக் வித் கோமாளியில் கோமாளியாக இவரை ரசித்தவர்கள் அதிகம். பெருமபாலும் காமெடி ஒன்றையே முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் சிவாங்கி.

சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இப்பொது விஜய் டிவியின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். நடுவில் தன்னுடைய படிப்பையும் கரெக்ட்டாக தொடர்ந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட இவர் தொடர்ந்து வேலை செய்து வருவதால், உடல் நிலை கொஞ்சம் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவனம் செலுத்து வரும் சிவாங்கி தற்போது ஒரு ஆல்பம் பாடல் தானே பாடி, நடித்து வெளியிட தயாராகி வருகிறார். இந்த விஷயத்தை அவரை அண்மையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகரின் கேள்வி பதில்கொடுத்து உறுதிபடுத்தியுள்ளார். திரையுலகிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் டான் படத்தில் நடித்துள்ளார்.

சில காலமாகவே அவர் கலந்து கொள்ளும் வெளிநிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் தானை அழகாக கட்டிக்கொள்ள முற்பட்டு வருகிறார். சாதாரணமாகவே நன்றாக இருந்தாலும் சினிமா உலகில் ஜெயிக்க அதற்கென தனியான மெனக்கெடலைகள் தேவைப்படுவதால் அதில் இப்பொது கவனம் செலுத்தி வருகிறார் சிவாங்கி. அண்மையில் இவர் வெளியிட்ட ஒரு போட்டோஷூட்டை பார்த்துள்ள ரசிகர்கள் பலரும் நடிக்க வாய்ப்புகள் தேடியே சிவாங்கி இவ்வாறான போட்டோஷூட்கள் நடத்தி வெளியிட்டு வருகிறார் என கூறிவருகிறார்கள்.