நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் பற்றி சினிமா துறையினர் பேசுவதை சகஜமான ஒன்றே. நிறைய அரசியல்வாதிகள் சினிமாவிலிருந்தே தோன்றியுள்ளனர். ஆனால் எப்போதும் மற்றவர்களை விமர்சிக்காமல் நாம் எடுத்து வைக்கும் அரசியலை பற்றி மட்டுமே கருத்து கூறுவதே அரசியல் அறிந்தவர்கள் செய்யும் செயலாகும். ஆனால் எப்போதும் சர்ச்சைகளை வைத்தே படம் பண்ணும் ராம் கோபால் வர்மா இப்பொது நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து முன்னர் கருத்துக்களை தெரிவித்துவிட்டு இப்பொது பம்மி வருகிறார்.

ராம் கோபால் வர்மா 1989ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான “சிவா” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த இந்த படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்து வெளியிட்டு அங்கும் மிக பெரிய வெற்றியை பெற்றார். முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கும் முக்கிய இயக்குனராக மாறினார். இதனை தொடர்ந்து ஹிந்தியிலும் தெலுங்கிலும் மாறி மாறி படங்கள் இயக்கி வெளியிட்டார்.

இவர் இயக்கிய படங்களில் மிக முக்கியமானவை “Indian Political Trilogy” மற்றும் “Indian gangster trilogy” படங்கள் மிகவும் கவனம் ஈர்த்தவை மற்றும் வெற்றி படங்கள். இந்தியாவில் பலரும் பேசத்தயங்கும் வீரப்பனின் கொலை, என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி கதை, நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளும் அதனை அடிப்படையாக கொண்டு நடக்கும் ரவுடிக்களின் அராஜகங்கள் குறித்து படம் இயக்கியுள்ளார். 1999ஆம் ஆண்டு “ஷூல்” என்ற பீகார் அரசியல் மற்றும் போலீஸ் குறித்த படங்களை இயக்கியதற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

வருகிற ஜூலை 24ஆம் தேதியுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், அடுத்த குடியரசு தலைவர் தேர்ந்து எடுக்கும் தேர்தல் வருகிற ஜூலை 18ஆம் நடந்து, பதிவான ஓட்டுகள் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. இதற்காக மத்தியில் ஆளும் பா.ஜ.க சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு வேட்பாளராக களமிறக்கப்படுகிறார். எதிர் காட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹா களமிறக்கப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் திரௌபதி முர்மு பற்றி ஒரு கருத்தை ராம் கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். திரௌபதி இவர் என்றால் பாண்டவர்கள் யார்? குறிப்பாக கௌரவர்கள் யார்? என கடந்த 22ஆம் தேதி கொஞ்சம் நக்கலாக பதிவிட்டு இருந்தார். இது வைரலாகவே நிறைய பேர் அவர்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

பெரிய சிக்கல்கள் உருவானதால் உருவானதால் மன்னிப்பு கேட்கப்பதை வேறொரு மாதிரியாக திரௌபதி முர்மு பற்றி தெரியாமல் இவரு பதிவிட்டேன்..என்னுடைய நீண்ட நெடிய ஆராய்ச்சிக்கு பின் கூறுகிறேன், இந்தியாவின் மிக சிறந்த குடியரசு தலைவராகஇருப்பார் என பதிவிட்டு கூடவே “ஜெய் BJP” “thankyou BJP” என பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட சமூகவலைதளவாசிகள் “என்ன தல அடிகொஞ்சம் ஓவரோ” என கமெண்ட் செய்து கலாய்த்து வருகிறார்கள். அவர் இவ்வாறு ட்வீட் செய்த பின் நேற்று உத்தரபிரதேசத்தில் இவர் மேல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
