சின்னத்திரைகளிலும் ஒளிபரப்பாகும் நிறைய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலானவை விஜய் டீவியை சேர்ந்ததே. நீயா நானா, பிக் பாஸ், பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர், சுஐப்ர் சிங்கர் ஜூனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.சமையல் போட்டி என்றாலும் இதில் மிகவும் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் கோமாளிகளாக வந்து செய்யும் சேட்டைகளை தான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. விஜய் டிவியின் பல மைல்கால் நிகழ்வுகளில் இந்த நிகழ்ச்சியை துவங்கியதும் இவர்களுடைய மிக முக்கிய வெற்றியே. குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம்.

கோமாளியாக நிகழ்சியின் முக்கிய ஈர்ப்பு. இந்த நிகழ்ச்சியி மூலம் புகழ் அடைந்து இப்பொது புகழ் படங்களில் பிஸியாகி விட்டார். இந்த சீசனில், அவர் இல்லாத குறையை குரேஷி தீர்த்து வைத்து வருகிறார். கலக்கப்போவது யாரில் பட்டம் வென்ற இவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. . இந்நிலையில்குரோஷியின் ஒரு கெட்-அப்பை பார்த்து ரசிகர் ஒருவர் அவர்க்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் ஒன்று செய்திருக்கிறார்.

ஸ்ருத்திகா போல் குரேஷி போட்ட கெட்டப் எபிசோடு டி,ஆர்,பியில் எகிறியது. ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. இப்போது அது குறித்தே இந்த ரசிகர் பேசியுள்ளார். அவர், ஸ்ருத்திகா போல் கெட்ட போட்ட எபிசோட்டை நான் 100 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்த என்னை எபிசோடு அப்படியே மாற்றி விட்டது நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த மெசேஜை பார்த்த குரேஷிஅப்படியே சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ஸ்ருத்திகாவை டேக் செய்து அனைத்துப் புகழும் ஸ்ருத்திகாவை சேரும் என்று பதில் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
