பெரும்பாலும் உடன் நடிக்கும் திரைப்படங்களில் இல்லை சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம். அது கலைத்துறையில் அவ்வப்போது நடக்கும் விஷயங்களே. நடிகர் சூரியா-ஜோதிகா, சமந்தா-நாகசைதன்யா, விஜய் டிவி மிர்ச்சி சரவணன்- ,ராஜா ராணி சஞ்சீவ்-ஆலியா மானசா என இந்த லிஸ்டில் இருப்பவர்கள் ஏராளம். இப்பொது மற்றொரு விஜய் ரவி பிரபலமும் அந்த லிஸ்டில் இணைகிறார்.

இப்போதைய ரசிகர்களின் பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பலரும் விஜய் டிவியில் ஒளிபாப்பாகும் ஏதோ ஒரு தொடரை தான் கூறுவார்கள். அவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. எப்போதும் டிஆர்பியில் முதலில் இல்லை என்றாலும் எதோ ஒரு இடம் பெற்றுவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த தொடர் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

பாரதி கண்ணமாவில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு. பாரதியாக இந்த தொடரில் இவர் நடிக்கிறார். விஜய் டெலிவிஷன் அவார்டில் கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருதினை இந்த தொடரில் நடித்து தட்டி சென்றுள்ளார். இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக முதலில் நடித்து வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த இவர், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, தற்போது வினுஷா கதாபாத்திரத்தில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது நடிகர் அருண் பிரசாத் காதல் பற்றிய தகவல் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றொரு தொடர் ராஜா ராணி 2 சீரியல். இதில் வில்லியாக நடித்து வருபவர் வி.ஜே. அர்ச்சனா. சிறப்பாக நடித்ததற்காக அர்ச்சனாவுக்கு இம்முறை விஜய் டிவி விருது கிடைத்தது. அப்போது அவரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கூறி கிண்டல் செய்தார்கள்.

இதனால், அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற பேச்சு மக்களிடம் எழுந்தது. அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஒன்றாக இருக்கும் சில வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வந்தது. சமீபகாலமாக, நடிகர் அருண் பிரசாத்திற்கு விரைவில் திருமணம் என செய்திகள் வந்த நிலையில், அவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் சீக்ரெட்டாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Video Courtesy – VMakers