தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் நாசர். குணசித்திரம், வில்லன், ஹீரோ, துணை கதாபாத்திரம் என அனைத்து வகை சினிமா கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை சினிமாவில் உருவாக்கியுள்ளார். நடிகர் மட்டுமின்றி, இயக்குனர், தயாரிப்பாளர் என பலவேறு வேலைகளிலும் சிறந்துள்ளார். சிறந்த நடிகரான இவர் கடந்த சில காலமாக உடல்நல சரியில்லாத காரணத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக பலவகையில் செய்திகள் வெளியாகின. இதெற்கெல்லாம் இப்பொது அவருடைய மனைவி கமீலா ட்விட்டரில் பதில் கூறியுள்ளார்.

சினிமாவில் எப்போதும் ஒரு படத்தில் நடிக்கும் நாயகனே மக்களை மிகவும் கவருவார்கள். ஆனால் நாசர் நாயகர்களை விட வில்லனாக நடித்து ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்துள்ளார். அதற்கு அவர்க்கு மிகவும் உதவியது அவருடைய வித்தியாசமான “மூக்கு” . முரட்டுத்தனமான வில்லன், கோபக்கார போலீஸ், கெட்ட போலீஸ் என வெரைட்டி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார் நாசர்.

1985ம் ஆண்டு இயக்குநர் கேபாலச்சந்தர் இயக்கிய கல்யாண அகத்திகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நாசர். இதையடுத்து ஓரிரு படங்களில் நடித்து வந்த நாசருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது நாயகன். அந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பின் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து மிக சிறந்த நடிகராக பெயர் வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். இவரின் சில ஆண்டுகள் முன் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்ற “பாகுபலி” படங்களில் ராணாவின் அப்பாவாக தோன்றி, உடைந்த கையுடன் வில்லத்தனம் காட்டி அனைவரையும் சிலிர்க்க வைத்தார். தவிர, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ஹாஸ்டல்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து ‘வாய்தா’ படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக சமூகவலைத்தள பக்கத்தில் நடிகர் நாசர் உடல்நலக்குறைவால் இருப்பதாகவும் அதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும், சினிமாவை விட்டுவிலக போவதாகவும் தகவல்கள் பரவியது. இந்த வதந்தி காட்டுத்தீ போல் சோஷியல் மீடியாவில் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு நாசரின் மனைவி கமீலா நாசர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள கமீலா, “நாசரின் உடல் நிலை குறித்தும், அவர் இனி நடிக்க மாட்டார் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இதனை தொடக்கி வைத்தவர் நீண்ட நாட்கள் வாழ்ந்து இன்னும் பலர் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டும். நாசர் சினிமாவை தான் சுவாசிக்கிறார், அது தான் அவரது உணவு. அக்கறை காட்டிய நண்பர்களுக்கும் நன்றி. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
