உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. மறுமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு நச் என பதில் அளித்த அமலா பால்

தமிழின் முண்ணனி நடிகையாக இருந்தவர் அமலா பால் சிந்துசமவெளி படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. மைனா, தலைவா, என பல படங்களில் மாஸாக நடித்து இருப்பார். தெய்வத்திருமகள், ராட்சசன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஆடை. திரைப்படங்கள் மட்டுமில்லாம் வெப்சீரிஸ்களிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான பிட்ட கதலு என்ற வெப் சீரீஸ் பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது.

உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. மறுமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு நச் என பதில் அளித்த அமலா பால் 1

விளம்பரம்

தமிழில் வாய்ப்புகள் குறைந்தபோதிலும் தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதே போல் மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் சில ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பிறகு மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவருக்கும் அமலா பாலுக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக வதந்திகள் பரவியது. ஆனால் அமலா பால் அதை மறுத்தார். தனது அனுமதியில்லாமல் புகைப்படத்தை பகிர்ந்தார் என்று குற்றம்சாட்டி நண்பர் மீது வழக்கும் தொடர்ந்தார்.

தொடர்புடையவை  "விமர்சனம் செய்தவர்கள் முகத்தில் கறி அள்ளி பூசியுள்ள ஜோசப் விஜய்"!!"வீட்டின் முகப்பிலேயே நச் பதில்"!!

உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. மறுமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு நச் என பதில் அளித்த அமலா பால் 3

விளம்பரம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதாவது ரீல்ஸ், வீடியோ, போட்டோஷூட் என ரசிகர்களிடம் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வார். மேலும் அவ்வப்போது கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார். இவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் ஒன்றை நடத்தினார் அமலாபால். அதில் ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் அதற்கான தகுதிகள் என்ன? என்று கேட்க, நானும் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், என்னை நானே தேடிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன். எனக்கு தெரிந்தவுடன் உங்களுக்கு கண்டிப்பாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. மறுமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு நச் என பதில் அளித்த அமலா பால் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment