இந்தியன் 2 : படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் லீக்!!

இந்தியன் 2 : படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் லீக்!! 1

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புத் தளங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது .ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ராஜமுந்திரியில் உள்ள சிறையிலும் சில காட்சிகளைப் படமாக்கினார்கள்.

தற்போது போபாலில் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள். இதற்காக அங்குள்ள கட்டிடங்களுக்கு இடையே, படத்தின் காட்சிகளுக்குத் தகுந்தாற் போல் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி வருகிறார்கள் படக்குழுவினர். அங்குள்ள சாலைகளில் காவல்துறை வாகனங்களுக்கு இடையே கமல் குதிரை ஓட்டிக்கொண்டு போவது போல உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

மேலும், கமலின் வயதான கெட்டப்பும் முழுமையாக எப்படியிருப்பார் என்பதும் வெளியாகிய புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் படக்குழுவினர் சிறு அதிர்ச்சியில் இருக்கிறார்கள். போபாலில் உள்ள முக்கியமான சாலையில் படப்பிடிப்பு என்பதால், புகைப்படம் எடுக்கப்படாமல் எப்படித் தடுப்பது என்று படக்குழு திணறி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment