டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!!

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!! 1

காவிரி டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறுகையில்: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வடக்கு நோக்கி ஆந்திர கடல் பகுதிக்கு சென்றது. தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுவரையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 3 மி.மீ., அதிகமாக 130 மி.மீ., மழைப்பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

அடுத்த 2 நாட்களில் மழையின் அளவு குறைய வாய்ப்புள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரையில் ஓரளவு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடல், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 9செ.மீ., குப்பனாம்பட்டி 7செ.மீ., முண்டியம்பாக்கம் 6செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

விளம்பரம்

Leave a Comment