நடிகர் விக்ரம்-க்கு திடீரென மாரடைப்பு..தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

நடிகர் விக்ரமிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வந்த அவர் 1990ம் ஆண்டு முதல் படத்தில் நடித்தார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 1999ம் ஆண்டு வெளியான சேது படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின்னர் ஜெமினி, சாமி, பிதாமகன், அருள், அந்தியன், ராவணன், தெய்வத்திருமகள், ஐ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

நடிகர் விக்ரம்-க்கு திடீரென மாரடைப்பு..தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி 1

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் சில கலைஞர்கள் படத்திற்காக உடலை வருத்தி உடல் எடையை குறைப்பது போல, இவரும் உடல் எடையை கடுமையாக குறைப்பதும், பின்னர் அதே படத்தில் ஏற்றுவதும் போன்ற வித்தியாசங்களை காண்பிப்பார். இதனால் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இது மட்டுமில்லாமல் பாடல் பாடுவது, ஈகோ பார்க்காமல் மற்ற முண்ணனி நடிகர்களுக்கு பிண்ணனி பேசியுள்ளார். அமராவதி படத்தில் அஜீத்துக்கும், காதலன் மற்றும் மின்சாரக்கனவு படத்தில் பிரபுதேவாவுக்கும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அப்பாஸ்க்கும் பிண்ணனி பேசி இருக்கிறார்.

தொடர்புடையவை  பிரம்மாண்ட சாதனை படைத்த சிறகடிக்க ஆசை..! விஜய் டிவியே வெளியிட்ட புகைப்படம்..!

நடிகர் விக்ரம்-க்கு திடீரென மாரடைப்பு..தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி 3

விளம்பரம்

தேசிய விருது, சர்வதேச திரைப்பட விருதுகள், மாநில விருதுகள் என பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். பரமக்குடியில் 1966ம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது வயது 56. நடிகர் விக்ரமிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. திரைத்துறையில் மாபெரும் பங்காற்றிய அந்த கலைஞன் விரைவில் நலம் பெற நாமும் பிராத்திப்போம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment