“நட்சத்திரங்கள் வாழ்த்திய நயன் விக்கி தம்பதி…வெளிவராத புகைப்படங்கள்”

சோசியல் மீடியா அனைத்திலும் ட்ரெண்டிங்கில் இருப்பது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண செய்திகளே. கடந்த ஒரு மாதமாகவே இவர்களுடைய திருமண செய்த்தையை மட்டுமே அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு துவங்கிய இவர்களது காதல் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணத்தில் முடிந்துள்ளது.

Pic Photographer Credits: Joseph Radhik
Pic Photographer Credits: Joseph Radhik

சென்னையை அடுத்த மகாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் நடந்த இவர்களது திருமண விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

விளம்பரம்

தனியார் OTT தளத்திற்கு ஒளிபரப்பிற்காக விற்கப்பட்ட இவர்களது திருமணநிகழ்வால் பெரிதும் இது குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டே இருந்தன. திருமண முடிந்து திருப்பதி சென்ற தம்பதிகள் அங்குள்ள காலணிகளுக்கு தடை செய்யப்பட்ட இடத்தில் செருப்பு அணிந்து சென்று பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கடிதம் எழுத்தியும், இருவரது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  "ஃபாரின் நடிகையுடன் டூயட் ஆடும் சிவகார்த்திகேயன்"!!வெளியான "Sk20" படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள்
Pic Photographer Credits: Joseph Radhik
Pic Photographer Credits: Joseph Radhik

அதற்கு அடுத்தப்படியாக இவர்கள் மேல் மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றும் பதியப்பட்டுள்ளது. திருமணத்தன்று கடற்கரைக்கு வந்த பொதுமக்களை தனியார் திருமண நிகழ்விற்காக தடுத்து நிறுத்தியது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்ற வகையில் இப்பொது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அந்த பிரச்சைனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகை நயன்தாரா இப்போது இயக்குனர் அட்லீ இயக்கும் ஷாருக் கானின் “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார்.

விளம்பரம்

திருமணநிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த், ஷாருக் கான் இயக்குனர்கள் அட்லீ மற்றும் மணிரத்னம் ஆகியோரின் இதுவரையில் வெளிவராத புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Pic Photographer Credits: Joseph Radhik
Pic Photographer Credits: Joseph Radhik
விளம்பரம்

Leave a Comment