வசூலில் தாக்கத்தை ஏற்படுத்துமா சிறப்பு காட்சிகள்!

வசூலில் தாக்கத்தை ஏற்படுத்துமா சிறப்பு காட்சிகள்! 1

பிகில் படத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று வந்த புகாரையடுத்து சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி மறுத்திருந்தது. அதோடு, வசூலித்த கட்டணத்தையும் திருப்பித்தருமாறும் வலியுறுத்தியது. இந்த நிலையில், பிகில் சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என்று ஏஜிஎஸ் நிறுவனம், அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளை ஏற்ற அரசு, பிகில் படம் வெளியாகும் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் சிறப்புக் காட்சிக்கும் வசூலிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கூறி இந்த அனுமதி அளிக்கப்படுகிறது.அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

அரசு அறிவித்த அறிவிப்பால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதையடுத்து, இரவு முழுவதும் தூங்காமல் பிகில் படத்திற்காக திரையரங்கம் முன்பு காத்திருந்தன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.தொடர்ந்து, சிறப்புக் காட்சி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment