20 வருடங்களில் 75 படங்கள்…யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை செய்த லேடி சூப்பர் ஸ்டார்…மீண்டும் இணையும் ராஜா ராணி கூட்டணி

நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படம் இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது. 20 வருடங்களில் 74 படங்கள் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. அவர் 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் மனசினக்கரே என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார். இன்று அவர் நடிக்கும் 75வது படமான “லேடி சூப்பர் ஸ்டார் 75” என்ற படத்தின் பூஜை காலையில் நடந்தது. தன்னுடைய கடினமான உழைப்பாலும் மிகச்சிறந்த நடிப்பாலும் தன்னை திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்த்தியுள்ளார் நயன்தாரா. 20 வருடங்களில் 74 படங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல, தன்னை ஜெட் வேகத்தில் முன்னேற்றியுள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அற்புதமான நடிப்பு மற்றும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளார்.

20 வருடங்களில் 75 படங்கள்...யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை செய்த லேடி சூப்பர் ஸ்டார்...மீண்டும் இணையும் ராஜா ராணி கூட்டணி 1

விளம்பரம்

 

தற்போது 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீ ஸ்டூடியோஸ், டிரிடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக “லேடிஸ் சூப்பர் ஸ்டார் 75” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜை உடன் தொடக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் எழுத்தாளரும், இயக்குனருமான நிலேஷ் கிருஷ்ணா சில தகவல்களை கூறியுள்ளா.ர் அதில் எனது முதல் படத்தை ஜி ஸ்டூடியோஸ், டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு புகழ்பெற்ற நிறுவனங்களின் கீழ் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன், நாயகியை மையமாகக் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று அவர் கூறினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜாதி பற்றி பேசியதால் தான் தாக்கப்பட்டாரா விஜய் சேதுபதி? விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசிய சேதுபதியை தாக்கிய நபர்.

20 வருடங்களில் 75 படங்கள்...யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை செய்த லேடி சூப்பர் ஸ்டார்...மீண்டும் இணையும் ராஜா ராணி கூட்டணி 3

இந்த படம் நயன்தாராவின் 75வது படம் என்பதால், நயன்தாரா எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்ற மிக கவனத்துடன் செயல்படுவதாகவும். திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று கற்றுத்தந்த எனது குரு சங்கர் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் என்றும் அவர் கூறியிருந்தார்.  நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய 50வது படம், 75வது படம், நூறாவது படம் போன்ற படங்கள் மிக முக்கியமான மைல் கற்கள் ஆகும். அந்த வகையில் நயன்தாரா உடைய 75வது படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார், மேலும் இந்த படத்தில் ஜெய் ரெட்டின் கிங்சிலி சத்யராஜ் பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளனர். அட்லி இயக்கியிருந்த “ராஜா ராணி” திரைப்படத்தில் நயன்தாரா, சத்தியராஜ், ஜெய், ஆர்யா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். தற்போது இந்த கூட்டணியில் மீண்டும் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment