சிம்பு ஹன்சிகா நடிக்கும் “மஹா” ட்ரைலர்..ராட்சசன் படத்துக்கு அப்புறம் ஒரு நல்ல மெசேஜ் சொல்ற படமா இருக்க போகுது

பல வருடங்களுக்குப் பிறகு ஹன்சிகா மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள படம் மஹா. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் வருகிற ஜூலை 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்திலும், அவருடன் இணைந்து ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, நாசர், பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி போன்றவர்களும் நடித்துள்ளனர். இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். இந்த படத்தை U.R. ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். எக்ஸெட்ரா எண்டர்டெயின்மண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்பு ஹன்சிகா நடிக்கும் "மஹா" ட்ரைலர்..ராட்சசன் படத்துக்கு அப்புறம் ஒரு நல்ல மெசேஜ் சொல்ற படமா இருக்க போகுது 1

விளம்பரம்

படத்தின் ட்ரைலர் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் என்பதால் சிம்பு ஒரு சிறிய கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். ஆனாலும் படத்தில் அவருடைய கதாபாத்திரம் முக்கியமானாதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்து இருந்தார். படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்து இருந்தார். குழந்தைகளை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யும் கொடியவனிடம் இருந்து தனது மகளை காப்பாற்ற போராடும் தாயாக ஹன்சிகா நடித்துள்ளார்.

தொடர்புடையவை  ஜெனிலியாவின் வாழ்வில் கடினமான தருணங்கள்!!

சிம்பு ஹன்சிகா நடிக்கும் "மஹா" ட்ரைலர்..ராட்சசன் படத்துக்கு அப்புறம் ஒரு நல்ல மெசேஜ் சொல்ற படமா இருக்க போகுது 3

விளம்பரம்

2015ம் ஆண்டு வெளியான வாலு படத்தில் சிம்பும் ஹன்சிகாவும் நடித்து இருந்தனர். 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு தயாராக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தாமதமானது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Star Music India

விளம்பரம்

Leave a Comment