பிரேசிலுக்குச் செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

பிரேசிலுக்குச் செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை! 1

பிரேசில் நாட்டிற்கு வருகை தரும் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இனி விசா (அயல்நாட்டு நுழைவுச்சான்று) தேவையில்லை என்று பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரேசிலின் அதிபராக பொறுப்பேற்ற ஜெய்ர் போல்சனாரோ அவர்கள் இனி பிரேசிலுக்கு இந்தியாவில் இருந்து வரும் தொழில் பிரமுகர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விசா தேவையில்லை என்று நேற்று வியாழக்கிழமை அன்று அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் அவர் சீனாவிற்குச் சென்ற போது சீனர்களுக்கும் இச்சலுகையை அளித்துள்ளார்.

விளம்பரம்

ஏற்கனவே பிரேசில் நாட்டின் அரசு இந்த ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களுக்கான விசா தேவைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. எவ்வாறாயினும், அந்த நாடுகள் பிரேசிலிய குடிமக்களுக்கான விசா தேவைகளை கைவிடவில்லை.

விளம்பரம்

Leave a Comment