“புதிய பாதையை உருவாகியுள்ள பார்த்திபன் – இரவின் நிழல் ட்விட்டர் ரிவியூ”!!

நடிகர் இயக்குனர் பார்த்திபனின் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் “இரவின் நிழல்”. புதிய பாதை படம் மூலம் திரை துறையில் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று மக்களின் கவனத்தை ஈர்த்ததோடு அந்த படம் மிக பெரிய வெற்றியை பதிவு செய்து இருந்தது. பின்னர் “ஹவுஸ்புல்” படத்தை இயக்கியிருந்தார். அந்த படமும் தேசிய விருதை வென்று இரண்டு தேசிய விருதை வென்ற இயக்குனராக, நடிகராக பரிட்சயம் பெற்றார் பார்த்திபன்.

"புதிய பாதையை உருவாகியுள்ள பார்த்திபன் - இரவின் நிழல் ட்விட்டர் ரிவியூ"!! 1

விளம்பரம்

இது வரையில் 14 படங்கள் இயக்குனராக பணியாற்றியுள்ள பார்த்திபன் அதில் “இவன், கதை திரைக்கத்தை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு” போன்ற கதைக்களத்திலும், மேக்கிங்கிலும் புது யுக்தியை கையாண்டு மிக நல்ல விமர்சனங்களை பெற்றார். இருப்பினும் இந்த படங்கள் வணீக ரீதியாக நல்ல வெற்றியை பெற தவறின.

"புதிய பாதையை உருவாகியுள்ள பார்த்திபன் - இரவின் நிழல் ட்விட்டர் ரிவியூ"!! 3

விளம்பரம்

இருப்பினும் தற்போது புது முயற்சியாக “Non-Linear Single shot” இல் படமாக்கப்பட்ட “இரவின் நிழல்” படத்தை  எடுத்துமுடித்துள்ளார். 3 ஆஸ்கார் விருதுகளை வென்ற கலைஞர்கள் இருக்கும் இந்த படத்தில் கைதாக போகும் ஒரு சினிமா Financierரும், அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் பேசும் படமாக இது உருவாகியுள்ளது. 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் எந்த ஒரு எடிட்டிங் இல்லாமல் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. அவர்கள் படத்தை எடுக்க முற்பட்ட விதத்தை முதல் 30 நிமிடங்கள் ஓடவிட்டு மெய்சிலிர்க்க வைத்துள்ளார் இயக்குனர் பார்த்திபன்.

தொடர்புடையவை  Malaysia Vasudevan குரலில் Manasilayo First single..! வெறித்தனமாக வெளியான அசத்தல் Promo..! 27வருடங்களுக்கு பிறகு Rajini-க்கு பாடல் பாடும் Vasudevan..!

"புதிய பாதையை உருவாகியுள்ள பார்த்திபன் - இரவின் நிழல் ட்விட்டர் ரிவியூ"!! 5

விளம்பரம்

இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இத படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சினிமா விமர்சகர்களும், ரசிகர்களின் முதல் காட்சி கொண்டே படத்தை பார்த்து ரசித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சிறப்பான மேக்கிங், ஏ.ஆர்.ரகுமானின் நேர்த்தியான இசை, பார்த்திபனின் மிக பெரிய முயற்சி என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

"புதிய பாதையை உருவாகியுள்ள பார்த்திபன் - இரவின் நிழல் ட்விட்டர் ரிவியூ"!! 7

விளம்பரம்

இன்று திரைபடத்தை பார்த்த பலரும் படத்திற்கு நல்ல விமர்சனங்களையும், இது திரையரங்குகளில் மக்களால் பார்த்து கொண்டாடப்பட வேண்டிய படம் எனவும், இது போன்ற ஒரு புதிய திரைப்பட அனுபவத்தை தங்களுக்கு அளித்ததற்கு ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

"புதிய பாதையை உருவாகியுள்ள பார்த்திபன் - இரவின் நிழல் ட்விட்டர் ரிவியூ"!! 9

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment