நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளி வரவுள்ள வெப் சீரிஸ் தான் தமிழ் ராக்கர்ஸ். இந்த தொடரை ஈரம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் குமார் கலைவாணன் இந்த படத்தை எழுதியுள்ளார். ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இது ஒரு வெப் சீரிஸ் ஆக சோனி ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் எவ்வாறு முறைகேடாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து வெளியிடுகின்றனர் என்றும், அதனால் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் இழப்புகள் பற்றியும், அந்த குற்றத்தை கதாநாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது பற்றிய படம். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரை கேட்டாலே பயந்து ஓடுவார்கள். ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்போ அல்லது வெளியான அன்றோ முதல் காட்சியை அப்படியே படம் எடுத்து தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள் என அனைவரும் தமிழ் ராக்கர்ஸ் மீது புகார் அளித்தும் இன்று வரை தமிழ் ராக்கர்ஸ் என்றால் யார்? அவர்கள் எத்தனை பேர்? குழுவாக இயங்குகிறார்களா? அல்லது தனியாக இயங்குகிறார்களா? என்பது இன்று வரை தெரியவில்லை.

இந்த நிலையில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இந்த நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்த வெப் சீரிஸ் சைபர் கிரைம் குறித்தும், படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் கும்பலை மையமாக வைத்தும் உருவாகியுள்ளது. கதாநாயகன் திருட்டுத்தனமாக திரைப்படங்களை பதிவிடும் தமிழ் ராக்கர்ஸ் எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பது போன்ற காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த தொடர் வெளியாக இருக்கிறது. ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண.. Watch Tamil Rockers Trailer Below…
Youtube Video Code Embed Credits: SonyLiv