கன்னட கேஜிஎப் எல்லாம் ஓரமா போங்க! தமிழில் கேஜிஎப் படத்தில் நடிக்க உள்ள விக்ரம், பா ரஞ்சித் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

கன்னட திரையுலகில் சமீபத்தில் யாஷ் நடிப்பில் வெளியாக இருந்த திரைப்படம் தான் கேஜிஎப். இந்த படம் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றியையும், ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் அள்ளி குவித்திருந்தது. இதனால் பட குழு கே ஜி எஃப் 2 என்ற இரண்டாம் பாகத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது. இந்த நிலையில் தமிழில் கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து விக்ரமின் 61வது படமான “சீயான் 61”  படத்தை எடுக்கவுள்ளதாக இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.

கன்னட கேஜிஎப் எல்லாம் ஓரமா போங்க! தமிழில் கேஜிஎப் படத்தில் நடிக்க உள்ள விக்ரம், பா ரஞ்சித் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு 1

விளம்பரம்

சீயான் 61 படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா ரஞ்சித், இந்த படத்தின் கதை கே ஜி எஃப் ஐ பின்னணியாக கொண்டது என்று கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பா ரஞ்சித் இயக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீம் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இது 19ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா ரஞ்சித் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  சொறி நா*க்கு கொம்பு வச்ச மாதிரி இருக்கு அதான் ஏலியனா? பங்கமாக கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை

கன்னட கேஜிஎப் எல்லாம் ஓரமா போங்க! தமிழில் கேஜிஎப் படத்தில் நடிக்க உள்ள விக்ரம், பா ரஞ்சித் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு 3

விளம்பரம்

சார்பட்டா பரம்பரை வெற்றியை தொடர்ந்து இதுபோல பீரியட் படங்களை இயக்கம் முயற்சியில் ஆர்வம் கட்டு வருகிறார் பா ரஞ்சித். அந்த வகையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக முதல் கலகத்தை தொடங்கிய பழங்குடி இன மக்களின் தலைவரான சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சியான் 61ன் படபூஜை விழா முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பா ரஞ்சித் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலத்தில் நடந்த கோலார் தங்க சுரங்கத்தில் உண்மையான சம்பவங்களை சொல்லும் படமாக இது இருக்கும் என்று தெரிவித்தார்.

கன்னட கேஜிஎப் எல்லாம் ஓரமா போங்க! தமிழில் கேஜிஎப் படத்தில் நடிக்க உள்ள விக்ரம், பா ரஞ்சித் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு 5

விளம்பரம்

கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படத்தில் யாஷ் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதைவிட பல மடங்கு தமிழில் உருவாகவுள்ள இந்த கோலார் தங்க சுரங்கத்தை மையப்படுத்திய படத்தில் நடிகர் விக்ரம் கண்டிப்பாக மிரட்டி விடுவார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தின் வில்லன் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று பா ரஞ்சித் கூறியுள்ளார்.

தொடர்புடையவை  தளபதி 64 வது படத்தின் ஆக்ஷன் காட்சிக்காக டெல்லி பறந்து செல்லும் படக்குழு!!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment